ETV Bharat / state

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எம். நடராசன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அரும்பாடுபட்டவர் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எம்.நடராசன் என மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
author img

By

Published : Sep 11, 2020, 10:08 PM IST

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நடராசன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எம்.நடராசனின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியான அவர், கருணாநிதிக்கு நெருக்கமானவர்.

பழகுவதற்கு இனிமையான அவர், 1983 முதல் 1994 வரை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து பல்வேறு சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கியவர். ஏழை எளியவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்ட அவரை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக நான்கு முறை கழக ஆட்சியில் நியமித்து அழகு பார்த்தவர் கருணாநிதி.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அரும்பாடுபட்ட கே.எம்.நடராசனின் மறைவு இந்தத் தருணத்தில் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் - உறவினர்களுக்கும் - அவரோடு பணியாற்றிய சக நீதியரசர்கள், வழக்கறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.