ETV Bharat / state

"சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும்" - இந்தி தெரியாததால் கடன் மறுக்கப்பட்ட விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் - இந்தி தெரியாதால் கடன் மறுக்கப்பட்ட விவகாரத்தில் மு.க. ஸ்டாலின்

சென்னை: தமிழர் உணர்வுடன் விளையாடினால் சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு என்று அரியலூரில் இந்தி தெரியாததால் கடன் மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

MK Stalin statement on bank loan issue
MK Stalin statement on bank loan issue
author img

By

Published : Sep 22, 2020, 4:35 PM IST

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வசித்துவருபவர் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர், பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு மருத்துவமனைகளில் மருத்துவராகப் பணிபுரிந்து கடைசியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்த இவர், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டுச் சென்றுள்ளார். அங்கு வங்கி மேலாளராக இருந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த நபர், இந்தி தெரியாத காரணத்தினால், அவருக்கு கடன் வழங்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து இன்று (செப் 22) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில், "ஜெயங்கொண்டத்தில் வாழும் ஓய்வு பெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியன் உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சென்றபோது, ‘இந்தி தெரியாத உங்களுக்குக் கடன் தரமுடியாது’ என்று ஆணவத்துடன் கூறியிருக்கிறார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் வட இந்திய அதிகாரி!

இந்தி மொழி வெறி எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா? பாஜக அரசின் பின்புலம் இதற்குக் காரணமா? எதுவாக இருந்தாலும் தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்! சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு; எச்சரிக்கை!" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்தி தெரியாததால் கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர் - மருத்துவருக்கு நேர்ந்த அவலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.