பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்குக் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இச்செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து எஸ்.பி.பியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்தார்.
எஸ். பி. பி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி. பி விரைவில் குணமடைய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "கரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் தேறி வருகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த எஸ்.பி.பி விரைந்து முழு உடல்நலன் பெற்று மீண்டும் தன் பயணத்தைத் தொடரட்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
#Covid19 காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ‘பாடும் நிலா’ #SPBalasubramanyam உடல் நலம் தேறி வருகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) August 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த SPB அவர்கள் விரைந்து முழு உடல்நலன் பெற்று மீண்டும் தன் பயணத்தைத் தொடரட்டும்!
">#Covid19 காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ‘பாடும் நிலா’ #SPBalasubramanyam உடல் நலம் தேறி வருகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) August 17, 2020
இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த SPB அவர்கள் விரைந்து முழு உடல்நலன் பெற்று மீண்டும் தன் பயணத்தைத் தொடரட்டும்!#Covid19 காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ‘பாடும் நிலா’ #SPBalasubramanyam உடல் நலம் தேறி வருகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) August 17, 2020
இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த SPB அவர்கள் விரைந்து முழு உடல்நலன் பெற்று மீண்டும் தன் பயணத்தைத் தொடரட்டும்!