இது குறித்து அவரது ட்விட்டரில், "தமிழ்நாடு முழுவதும் தற்போது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளமாக தேங்கி இருக்கும் மழைநீர் பல ஊர்களில் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. பல இடங்களில் மின்சார வயர்கள் துண்டிக்கப்பட்டு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. தண்ணீர் தேக்கம் காரணமாக கொசு உற்பத்தி பெருகி, அதன் மூலம் டெங்கு பரவுவது அதிகரிக்கக்கூடும்.
எனவே, இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் செயல்பட வேண்டும். வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசும், அரசு அலுவலர்களும் உடனடியாக இறங்கிட வேண்டும். உடனடி நிவாரணப் பணிகளையும் தொடங்கிட வேண்டும்" என பதிவிட்டுள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) December 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
சாலைகளில் வெள்ளமெனத் தேங்கி இருக்கும் தண்ணீர், பல ஊர்களில் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.#TNRains
">தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) December 1, 2019
சாலைகளில் வெள்ளமெனத் தேங்கி இருக்கும் தண்ணீர், பல ஊர்களில் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.#TNRainsதமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) December 1, 2019
சாலைகளில் வெள்ளமெனத் தேங்கி இருக்கும் தண்ணீர், பல ஊர்களில் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.#TNRains
இதையும் படிங்க: ’அரசு முறைகேடாக தேர்தல் நடத்தினாலும் எதிர்கொள்ள தயார்’ - மு.க. ஸ்டாலின்