ETV Bharat / state

பிரதமர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு - அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் முக ஸ்டாலின்

சென்னை: பிரதமர் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.

MK Stalin to participate in today's PM Modi all party meeting

author img

By

Published : Jun 19, 2020, 11:55 AM IST

Updated : Jun 19, 2020, 1:24 PM IST

இந்தியா-சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் கடந்த மாதம் இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தைக் குவித்ததால், போர்ப்பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து இரு நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட ராணுவ அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் முடிவில், கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து வீரர்களைத் திரும்ப பெற்றுக்கொள்ள இருதரப்பும் ஒப்புக்கொண்டன.

இருந்தபோதிலும், கடந்த 15ஆம் தேதி சீன படையினர் இந்திய ராணுவத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் சீனாவிற்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்துவந்தன.

இதனையடுத்து, இந்தியா - சீனா மோதல் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (ஜூன் 19) நடைபெறும் என நரேந்திர மோடி அறிவித்து, அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்புவிடுத்திருந்தார்.

இந்நிலையில், சீனாவுடனான மோதல் பற்றி விவாதிக்க இன்று மாலை ஐந்து மணிக்கு பிரதமர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இதையும் படிங்க...'போர் தீர்வாகாது, பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள்'- ஃபரூக் அப்துல்லா
!

Last Updated : Jun 19, 2020, 1:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.