சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் பணிகளை விரிவுப்படுத்த தொடங்கியுள்ளது. திமுக மாவட்ட செயலாளர் தொடங்கி ஒன்றியச் செயலாளர் என அனைத்து நிர்வாகிகளிடம் மாவட்ட வாரியாக திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து இணைய வழி உறுப்பினர் சேர்க்கை என, 'எல்லோரும் நம்முடன்' என்ற முன்னெடுப்பை தொடங்கி உறுப்பினர்களை சேர்த்து வந்தனர். மேலும் 'விடியும் வா' என்று காணொலி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
அந்தவரிசையில், திமுக தலைவர் ஸ்டாலின் வரும் ஜனவரி 5ஆம் தேதி பொது மக்களை நேரடியாகச் சந்தித்து பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளதாகவும், காஞ்சிபுரத்தில் தொடங்கவுள்ள இந்தக் கூட்டம் ஜனவரி 14 ஆம் தேதிவரை முதல் கட்டமாக நடைபெறும் என்றும் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.