ETV Bharat / state

கட்சி சார்புகளைக் கடந்து உதவுங்கள்.....ஸ்டாலின் அறிவுறுத்தல்! - DMK

சென்னை: சென்னையில் தவித்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாநில எல்லைகள், கட்சி சார்புகளைக் கடந்து உதவ வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.

கட்சி சார்புகளைக் கடந்து உதவுங்கள்.....ஸ்டாலின் அறிவுறுத்தல்!

author img

By

Published : Mar 28, 2020, 4:00 PM IST

இரண்டு நாட்களுக்கு முன்னதாக மேற்குவங்கத் தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவ உதவி போன்ற அடிப்படை வசதிகளை வழங்க உதவுமாறு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 18 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான டெரிக் ஓ பிரையன் இன்று ட்விட்டரில் பதிவிட்டார்.

  • Thank you @derekobrienmp & @MamataOfficial

    In a time like this, all states must come together cutting across boundaries and party affiliations to help those who are most vulnerable.

    I have instructed all the DMK people representatives and cadres to help anyone in need. https://t.co/cbSLpaXP4s

    — M.K.Stalin (@mkstalin) March 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதில், "சென்னையில் தவித்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 40 தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைத் தொடர்புகொண்டு தெரிவித்தோம். எந்த மறுப்பும் கூறாத அவரது குழுவினர் தேவையான உதவிகளை அவர்களுக்கு நேரில் சென்று வழங்கினர். நன்றி. 'பெருங்கடலில் ஒரு சிறு துளி'. இது, தமிழ்நாடு-மேற்கு வங்க மாநிலங்களின் கூட்டுப்பணி" எனக் குறிப்பிட்டு நெகிழ்ந்திருந்தார்.

  • A drop in the ocean...
    Migrant workers badly hit. 40 from Bengal stranded in Chennai contacted us.We reached out to @mkstalin
    His team met & are taking care. Thx much. Under Bengal CM,migrant workers from diff States being given food/shelter. TN-Bengal teamwork #Covid19India

    — Citizen Derek | নাগরিক ডেরেক (@derekobrienmp) March 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனை மறுபதிவிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "நன்றி, டெரிக் ஓ பிரையன் மற்றும் மம்தா பானர்ஜி! இதுபோன்ற காலங்களில், அனைத்து மாநிலங்களும் எல்லைகள் - கட்சி சார்புகளைக் கடந்து பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்களுக்கு உதவ வேண்டும். திமுகவின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், தொண்டர்களும் தேவையில் உள்ளோருக்கு உதவிட வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பிற்கு அதிகமாக நிதி ஒதுக்கிய தஞ்சாவூர் எம்.பி.யுடன் ஒரு உரையாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.