ETV Bharat / state

'5 ஆண்டுகளாகியும் வராத எய்ம்ஸ்... முதலமைச்சரின் அடுத்த கபட நாடகம் தயாராகிறதா' - மு.க. ஸ்டாலின் - madurai aims rti issue

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு இடம் தரவில்லை எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அம்பலமாகியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
author img

By

Published : Dec 17, 2020, 6:58 AM IST

மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது, அதன்படி 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு, சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் தொடங்கின. ஆனால், தற்போதுவரை பணிகள் தாமதமாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக திமுத தலைவர் மு.க. ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலின் பேஸ்புக் பதிவு

அதில், "மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிலத்தை அதிமுக அரசு இதுவரை மத்திய அரசுக்கு வழங்காமல் தாமதம் செய்துகொண்டிருக்கிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில், மதுரை மண்டலத்தில் வாழும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது.

2015இல் அறிவிக்கப்பட்டு - நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு - வாக்காளர்களை ஏமாற்றும் நோக்கில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக அவசரம் அவசரமாக, 2019 ஜனவரி மாதத்தில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்ற இந்த விழா நடைபெற்று இரண்டு ஆண்டுகளாகப் போகிறது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை இன்னமும் ஒப்படைக்கவில்லை. ஜிக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டு அதுவும் கையெழுத்து ஆகவில்லை!

பேரம் நடக்கிறதா?

ஜூன் 2019ஆம் ஆண்டே பி.எம்.எஸ்.எஸ்.ஒய். திட்டத்தின் இயக்குநர், "மாநில அரசிடம் நிலம் பெறுவது ஒரு பிரச்சினையே அல்ல; மாநில அரசிடம் நிலம் இருக்கிறது. நான் அங்குச் சென்று கையெழுத்திட வேண்டும். அவ்வளவுதான்" என்று பேட்டியளித்து பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது.

இந்தக் கையெழுத்துப் போடுவதற்கு 18 மாதங்களா, இதிலும் யாரிடமாவது பேரம் பேசலாம் என்ற எண்ணமா? மத்திய பாஜக அரசு, அதிமுக அரசு ஆகியவற்றின் அலட்சியத்தால் ஐந்து ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டம் ஆழ்ந்த உறக்கம் கொண்டிருக்கிறது.

அறிவிப்பிற்கும் - செயல்பாட்டிற்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் இடைவெளி என்பது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத் திறமைக்கான இலக்கணமா? சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் மீண்டும் ஒரு கபட நாடகம் போட எத்தனிக்காமல் - மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உடனடியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.