ETV Bharat / state

கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! - சென்னை மாவட்ட செய்திகள்

கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
author img

By

Published : Nov 2, 2021, 10:33 PM IST

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை இன்று (நவ.2) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது பத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக கொளத்தூர், திருச்செங்கோடு, தொப்பம்பட்டி, விளாத்திகுளம் ஆகிய நான்கு இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் B.Com, BBA, BCA, B.Sc. Computer Science ஆகிய நான்கு பாடப்பிரிவுகளுடன் கல்லூரி தொடங்கிட உயர் கல்வித்துறை அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது.

நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர்கள் சேர்க்கை

நான்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில், அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கல்லூரி தொடங்கிட உத்தேசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நடப்புக் கல்வியாண்டிலேயே மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான அறிவிப்பு அக்டோபர் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதுவரை 193 மாணவ, மாணவியர்கள் சேர்க்கை முடிக்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் பல்வேறு வசதிகள்

இக்கல்லூரியில் 7 வகுப்பறைகள், 2 கணினி ஆய்வகம், 1 நூலகம், கல்லூரி முதல்வர் நிர்வாக அறை, பேராசிரியர் பணியாளர்கள் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான 11 உதவிப் பேராசிரியர்கள் தேர்வுக்கான நேர்காணல் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி நடத்தப்பட்டது.

கல்லூரியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பல்கலைக்கழக விதிமுறைகளின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் நேர்முகத் தேர்வுக்கு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு கலந்து கொண்ட 284 விண்ணப்பதாரர்களின் தகுதிகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன ஆணையை அக்டோபர் 22ஆம் தேதி முதலமைச்சர் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து இன்று (நவ.2) முதலமைச்சரால் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீபாவளிக்கு வெளியூர் செல்பவர்களின் கவனத்திற்கு - சைலேந்திரபாபு என்ன கூறினார் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.