தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு எதிராக பலர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "#JayarajandFenix கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை காவல் துறையினர் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி! என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? கைது செய்ய தைரியமற்றவருக்கு முதலமைச்சர் பதவி எதற்கு?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க : அமைச்சருக்கு பதிலடி கொடுத்த உதயநிதி!