ETV Bharat / state

குட்கா ஊழல்: சம்பந்தப்பட்டவர்களை காக்கும் அறிவிக்கப்படாத கூட்டணி என்ன?

சென்னை: குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை முதலமைச்சர் பழனிசாமியும், மத்திய பாஜக அரசும் வரிந்து கட்டிக் கொண்டு காப்பாற்றுவதில் உள்ள 'அறிவிக்கப்படாத கூட்டணி' என்ன?  என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

MK Stalin slams EPS & PM Modi Govt for Gutkha-scam-case  - CBI

author img

By

Published : Aug 26, 2020, 6:42 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “40 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்ற, 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்த 'குட்கா பேர ஊழலில்' வருமான வரித்துறை தலைமைச் செயலரிடம் கொடுத்த கோப்புகள் காணவில்லை.

வழக்கை விசாரித்த லஞ்ச ஊழல் தடுப்புத்துறை கூடுதல் காவல்துறைத் தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) மஞ்சுநாதா திடீரென்று வேறு துறைக்கு மாற்றப்பட்டார். உயர்நீதிமன்ற ஆணையின்படி விஜிலென்ஸ் ஆணையராக நியமிக்கப்பட்டு குட்கா வழக்கை விசாரித்து வந்த வி.கே.ஜெயக்கொடி ஐந்து மாதங்களில் தூக்கியடிக்கப்பட்டார்.

உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்துக் கடைநிலை ஊழியரான சிவக்குமார் என்பவர் தொடர்ந்த மனுவை விசாரத்த உச்சநீதிமன்றம், 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்தது.

மக்கள் நல்வாழ்வுத்துறை (!) அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் காவல்துறைத் தலைமை இயக்குநர்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரது வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இதன் பின்னர், ஆறு பேர் மீது மட்டும் முதல்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 'சிவக்குமார், செந்தில்முருகன்' ஆகிய இரு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மீது வழக்குத் தொடர நவம்பர் 2018-ல் சி.பி.ஐ. அனுமதி கோரியது. அதற்கு 20 மாதங்கள் கழித்து 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிமுக அரசு அனுமதி அளித்தது.

ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஊழல் முதலைகள் மீது குற்றப்பத்திரிக்கை இல்லை. இந்த மோசடிகளை இதுவரை சிபிஐ கண்டுகொள்ளவுமில்லை.

வழக்கு சம்பந்தப்பட்ட கோப்புகளை காணமல் போகச் செய்து, காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே.ராஜேந்திரனுக்கு பதவி, பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இத்தனை 'குட்கா’ நாடகங்களையும், செயலிழந்த நிலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் சிபிஐ மயான அமைதி காக்கிறது. தேவையான ஆதாரம் கிடைத்தும் சிபிஐ ஆமை வேகத்தில்கூட நகர மறுக்கிறது. அதற்குத் தடைபோட்டு வைத்திருப்பது யார்?

குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை முதலமைச்சர் பழனிசாமியும், மத்திய பாஜக அரசும் வரிந்து கட்டிக் கொண்டு, அதனால் ஏற்படும் அவமானம் பற்றிக் கவலைப்படாமல், காப்பாற்றுவதில் உள்ள அறிவிக்கப்படாத கூட்டணி என்ன?

அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் காவல்துறைத் தலைமை இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோரை நெருங்க விடாமல் சிபிஐ-யைத் தடுக்கும் உயர்மட்ட சக்தி எது?

மக்களின் உயிரைக் குடிக்கும் 'குட்கா ஊழலில்' அதிமுக அரசுக்கும் - மத்திய பாஜக அரசுக்கும் உள்ள இந்த ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.