சென்னை: ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்து ஒரு பரபரப்புக்காக, துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கினர்.
சமீப காலங்களாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைத் துணை முதலமைச்சர் ஆக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுச் செயல்பட்டு வந்ததாகவும், இதற்கான ஒத்திகையாகவே சேலம் திமுக இளைஞரணி மாநாடு நடத்தப்பட்டு வந்ததாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் பாஜக செயல்வீரர்களுக்கான பொதுக்கூட்டங்களில் அவ்வப்போது விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், 'உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் என வதந்தி பரவுவதாக ஸ்டாலின் அறிக்கை. அதற்கு இளைஞரணி செயலாளர் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தம்பி உதயநிதி அவர்களே, “எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்குத் துணையாகத்தான் இருக்கிறோம்” என்று பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார்.
இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் கழகத்தினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம். மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்தவே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும்.
அந்த நோக்கத்தின் எதிரிகள் தான் இது போன்ற உள்நோக்கம் கொண்ட வதந்திகளைப் பரப்புகிறார்கள்.!' என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சராக உள்ள தனது மகன் உதயநிதி ஸ்டாலினைத் துணை முதலமைச்சராகவும், அதன் பின்னர் முதலமைச்சராக ஆக்கும் எண்ணம் உள்ளதே தவிர, ஆட்சியில் கவனம் இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருந்தார். மேலும், இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், எதிராகவும் மீம்ஸ்கள் பரவி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்குவதே மு.க.ஸ்டாலினின் நோக்கம் - அண்ணாமலை குற்றச்சாட்டு