சென்னை: மழைக்காலத்தில் பேரிடர் மேலாண்மைத்துறையின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இன்று (நவ.2) ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையை மட்டுமில்லாமல் தமிழ்நாட்டையே அதிமுக ஆட்சியில் சீரழித்துவிட்டுச் சென்றுள்ளனர் எனவும்; அதை ஒன்றரை ஆண்டுகால திமுக ஆட்சியில் சரிசெய்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மழை, வெள்ளப்பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க எழிலகத்தில் உள்ள அவசர கால செயல்பாட்டு அறையில் நடக்கும் மழைக்கால மீட்புப்பணிகள் தொடர்பாக அலுவலர்களிடம் முதலமைச்சர் முன்னதாக கேட்டறிந்தார். உடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உடனிருந்து அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச்சந்தித்த பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'வடசென்னையில் மழைப்பாதிப்புகள் குறித்த கேள்விக்கு, வட சென்னையில் தண்ணீர் தேங்கி இருப்பதாகப் புகார் வந்திருக்கிறது. தொடர்ந்து அதனை அப்புறப்படுத்தி வருகிறோம். பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில், சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையே சீரழித்துவிட்டு சென்று இருக்கிறார்கள். அதை எல்லாம் ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் சரிசெய்தோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவித்தார்.
![மாநில அவசரகால செயல்பாட்டு மையம் - முதலமைச்சர் ஆய்வு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16812607_41_16812607_1667388003338.png)
இதையும் படிங்க: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டடங்கள்; திறந்துவைத்த முதலமைச்சர்