சென்னை: தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக, தென்மாவட்டங்களில் அதிகமான கனமழை இரண்டு நாட்களாக பெய்து வருகிறது. குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள கிராமமக்களை உடனடியாக கிராமங்களை விட்டு வெளியேற வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் தயவு செய்து வீட்டிலேயே இருக்கவும்.…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் தயவு செய்து வீட்டிலேயே இருக்கவும்.…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 18, 2023தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் தயவு செய்து வீட்டிலேயே இருக்கவும்.…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 18, 2023
இதைத்தொடர்ந்து தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதிக கனமழை பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (டிச.18) வெளியிட்ட X பதிவில், 'தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் தயவு செய்து வீட்டிலேயே இருக்கவும். மிகவும் அவசியமில்லாவிட்டால் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசு நிர்வாகத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை தயவுசெய்து கடைப்பிடிக்கவும். மத்திய, மாநில அரசுத்துறைகள் இயல்புநிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. விரைவில் நிலைமை சீரடைய பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட X பதிவில், 'அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து நேற்று முதல் அமைச்சர்களுடனும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசியும் - மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன்.
-
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும் #NorthEastMonsoon அதி கனமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மூத்த IAS அதிகாரிகளை நியமித்து, கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
— M.K.Stalin (@mkstalin) December 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை… pic.twitter.com/DFSMzCO3E2
">திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும் #NorthEastMonsoon அதி கனமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மூத்த IAS அதிகாரிகளை நியமித்து, கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
— M.K.Stalin (@mkstalin) December 17, 2023
அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை… pic.twitter.com/DFSMzCO3E2திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும் #NorthEastMonsoon அதி கனமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மூத்த IAS அதிகாரிகளை நியமித்து, கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
— M.K.Stalin (@mkstalin) December 17, 2023
அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை… pic.twitter.com/DFSMzCO3E2
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழக தோழர்கள், உடனடியாகக் களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணை நிற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன்' என்று கூறியுள்ளார்.
இதேபோல, எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட X பதிவில், 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகத்தின் சார்பில் உதவிக்கரம் நீட்டுவோம்! கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு விரைந்து உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி போன்ற நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு வழங்கிட இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னையில் ஏற்பட்டதுபோல் கவனக்குறைவுடன் மக்களை பாதிக்கப்படவிடாமல், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், காவல் பணி அதிகாரிகள் ஆகியோரின் அனுபவங்களைப் பயன்படுத்தி, சீர்குலைந்த சாலைகள், தகவல் தொடர்புகள் மற்றும் நிவாரணப் பணிகளை திட்டமிட்டு துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
-
பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகத்தின் சார்பில் உதவிக்கரம் நீட்டுவோம்!
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு விரைந்து உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி போன்ற நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில்… pic.twitter.com/n5K4yMSpEB
">பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகத்தின் சார்பில் உதவிக்கரம் நீட்டுவோம்!
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 18, 2023
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு விரைந்து உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி போன்ற நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில்… pic.twitter.com/n5K4yMSpEBபாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகத்தின் சார்பில் உதவிக்கரம் நீட்டுவோம்!
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 18, 2023
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு விரைந்து உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி போன்ற நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில்… pic.twitter.com/n5K4yMSpEB
மேலும், கனமழையில் பொதுமக்கள் கவனத்துடன் பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்வதுடன், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகளை வழங்கிட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளை கேட்டுக்கொள்கிறேன்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: South TN Rain Live Update:எந்தெந்த பகுதிக்கு 'ரெட் அலர்ட்'..தென்மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை..நிலவரம் என்ன?