சென்னை கொளத்தூரில் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பொற்றுவருபவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பாஜக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து நேற்று புகைப்படம் வெளியிட்டதற்கும், பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
திருவள்ளுவர் சிலைக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து உரிய விசாரணையை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 'ஸ்டாலினுக்கு முதலமைச்சர் யோகமே இல்லை' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி