ETV Bharat / state

துபாயில் முதலமைச்சர்: தமிழ்நாட்டிற்கு 2600 கோடி ரூபாய் முதலீடு... 9700 பேருக்கு வேலைவாய்ப்பு - UAE முதலீட்டாளர்களுடன் ஸ்டாலின் சந்திப்பு

தமிழ்நாட்டிற்கு 2600 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 9ஆயிரத்து 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக, ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

mk stalin invites uae investors  mk stalin meeting with uae investors  mk stalin in dubai  mk stalin signed 2600 project  தமிழ்நாட்டிற்கு 2600 கோடி ரூபாய் முதலீடு  UAE முதலீட்டாளர்களுடன் ஸ்டாலின் சந்திப்பு  துபாயில் ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு 2600 கோடி ரூபாய் முதலீடு.
author img

By

Published : Mar 27, 2022, 9:00 AM IST

Updated : Mar 27, 2022, 9:45 AM IST

துபாயில் முதலமைச்சர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் அமைப்புடன் நேற்று (மார்ச் 26) நடந்த சந்திப்பில், தமிழ்நாடு முதலமைச்சர், ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர் அமைப்பின் உறுப்பினர்களை சந்தித்தார். இச்சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் சிறப்புகளையும், தமிழ்நாட்டில் சிறந்த தொழில் சூழல் நிலவுவதையும் சுட்டிக்காட்டி, மாநிலத்தில் முதலீடுகள் மேற்கொள்ளுமாறு, அமைப்பின் உறுப்பினர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் கீழ்க்கண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன,

mk stalin invites uae investors  mk stalin meeting with uae investors  mk stalin in dubai  mk stalin signed 2600 project  தமிழ்நாட்டிற்கு 2600 கோடி ரூபாய் முதலீடு  UAE முதலீட்டாளர்களுடன் ஸ்டாலின் சந்திப்பு  துபாயில் ஸ்டாலின்
ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

*துபாயைச் சேர்ந்த நோபுள் ஸ்டீல்ஸ் நிறுவனம் (Noble Steel Company), 1000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், ஒரு உற்பத்தித் திட்டத்தினை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

* துபாயைச் சேர்ந்த ஒயிட் ஹவுஸ் நிறுவனம் (White House), 500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், 3 வருடத்தில் 150 கோடி ரூபாய் முதலீட்டில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனத்திலும், 5 வருடத்தில் 350 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத்திலும், என இரு ஒருங்கிணைந்த தையல் ஆலைகள் (Integrated Sewing Plants) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

* துபாயைச் சேர்ந்த டிரான்ஸ்வேல்டு குழுமம் (M/s. Transworld Group) 100 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உணவுப் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது, UAE சர்வதேச முதலீட்டாளர்கள் அமைப்பின் செயலாளர்-பொது, H.E. ஜமால் சாயிப் அல் ஜர்வான் கூறியதாவது, “தொழில் முதலீட்டை பொறுத்தவரை தமிழ்நாடு ஒரு முக்கியமான மாநிலம். இப்பகுதியிலுள்ள முதலீட்டாளர்கள் தமிமிழ்நாட்டில் முதலீடு செய்ய சிறப்பான வாய்ப்புகள் உள்ளது” என்றார்.

மொத்தம் 2600 கோடி: இதையடுத்து, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள நிறுவனங்களின் உயர் தலைமை நிர்வாக அலுவலர்களை நேற்று (மார்ச் 26) மாலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் கீழ்க்கண்ட இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன,

* ஆஸ்டர் DM ஹெல்த்கேர் அமைப்பு (Aster DM Healthcare), 500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு (3000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு மற்றும் 500 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பு) என்ற வகையில், 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

* ஷெராப் குழும நிறுவனம் (Sharaf Group), தமிழ்நாட்டில், 500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், இருப்புப்பாதை இணைப்பு வசதியுடன், ஒரு சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைத்திடுவதற்காக, தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டிற்கு 2600 கோடி ரூபாய் முதலீடு

நேற்று (மார்ச் 26) நடந்த சந்திப்பில் மொத்தம் 2600 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 9700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஸ்டாலின் வலியுறுத்தல்: இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர், ஃபராபி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் (Farabi Petro Chemicals) தலைமைச் செயல் அலுவலர் முகம்மது அல் வாதேவை (Mr. Mohammed Al-Wadaey) சந்தித்த போது, தமிழ்நாட்டில் உள்ள 4 பெரும் துறைமுகங்கள், சாலைகள் மற்றும் ரயில் இணைப்புகள் பற்றியும், திறன்மிகு பணியாளர்கள், மேம்பட்ட வணிகச்சூழல் போன்றவற்றை எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் ஒரு ரசாயன வளாகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்திடுமாறு கேட்டுக் கொண்டார்.

பின்னர், உலகப் புகழ் பெற்ற புர்ஜ் கலீஃபா கட்டடத்தை நிறுவியவர்களும், மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனர்களுமான எம்மார் பிராப்பர்டீஸ் (EMAAR Properties) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஹாதி பத்ரியை (Mr. Hadi Badri) சந்தித்த முதலமைச்சர், இக்குழுமத்தினை தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

JAFZA பார்வையிட்ட தங்கம் தென்னரசு: இதற்கிடையே, நேற்று (மார்ச் 26) காலை, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, துபாயில் உள்ள ஜெபல் அலி தடையில்லா வர்த்தக மண்டலத்தினை (Jebel Ali Free Zone – JAFZA) பார்வையிட்டார். இந்த ஜெபல் அலி தடையில்லா வர்த்தக மண்டலம், மத்தியக் கிழக்கு நாடுகளிலேயே மிகப் பெரிய துறைமுகமும் வர்த்தக மண்டலமும் கொண்டதாகும்.

இந்த தடையில்லா வர்த்தக மண்டலம், ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த மிகப்பெரிய சேவைகள் மற்றும் வணிகத் தீர்வு வழங்கிடும் டிபி வேல்ட்டு (DP World) நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வணிக வர்த்தக மையப் பிரிவாகும். மேலும் இவை, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்கு வாய்ப்புகளையும், மிகப் பெரிய சந்தையையும் வழங்கி வரும் நிறுவனமாக விளங்குகிறது.

இந்த தடையில்லா வர்த்தக மண்டலத்தில் உள்ள தானியங்கி கொள்கலன் முனையத்தினையும் (Automotive Container Terminal), இம்மண்டலத்தின் கிடங்கு வசதிகள், சேமிப்புக் கிடங்குகள், வர்த்தகம் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தேவையான விநியோகம், பரிமாற்றம் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் போன்றவற்றை தொழில் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.

தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளுர் மாவட்டத்தில் DP World நிறுவனம் ஒரு தடையில்லா வர்த்தக மண்டலத்தை உருவாக்கி வருகிறது. மேலும், தென் மாவட்டங்களில் ஒரு தடையில்லா வர்த்தக மண்டலம் அமைத்திட, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், DP World நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய் அமைச்சர்களுடன் ஆலோசனை

Last Updated : Mar 27, 2022, 9:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.