சென்னை: உலகின் மிகப்பெரிய சினிமா விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம், சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. அதேபோல் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதைத் தட்டிச் சென்றது.
இதற்கு திரை பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆஸ்கர் விருதை வென்றதற்காக கார்த்திகி கோன்ஸ்வால்ஸ் மற்றும் குனீத் மோங்கா ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்.
இந்திய தயாரிப்புகளில் முதல் முறையாக இரண்டு பெண்கள் ஆஸ்கர் விருதை வென்ற செய்தியை விட, வேறு ஒரு நல்ல செய்தி என்பது கிடையாது. தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் கதை உருவாக்கம் மற்றும் திரைக்கதை நகர்வு ஆகியவை ஆஸ்கரை வெல்வதற்குத் தேவையான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது” என கூறியுள்ளார்.
-
Congrats to Kartiki Gonsalves & @guneetm on winning the #Oscar.
— M.K.Stalin (@mkstalin) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
No better news to wake up to than two women bringing the first ever Oscar for an Indian Production.
The patient making & the moving story of #TheElephantWhisperers deserve all the praises & accolades it's getting. https://t.co/73WyGgqy3T
">Congrats to Kartiki Gonsalves & @guneetm on winning the #Oscar.
— M.K.Stalin (@mkstalin) March 13, 2023
No better news to wake up to than two women bringing the first ever Oscar for an Indian Production.
The patient making & the moving story of #TheElephantWhisperers deserve all the praises & accolades it's getting. https://t.co/73WyGgqy3TCongrats to Kartiki Gonsalves & @guneetm on winning the #Oscar.
— M.K.Stalin (@mkstalin) March 13, 2023
No better news to wake up to than two women bringing the first ever Oscar for an Indian Production.
The patient making & the moving story of #TheElephantWhisperers deserve all the praises & accolades it's getting. https://t.co/73WyGgqy3T
அதேபோல் மேலும் ஒரு ட்விட்டர் பதிவில், “ஆஸ்கர் விருதை வென்றதன் மூலம் ‘நாட்டு நாட்டு’ பாடல், முதல் இந்திய மற்றும் ஆசிய நுழைவை உலக அரங்கில் காண்பித்து வரலாறு படைத்துள்ளது. இந்த அரும்பெரும் சாதனைக்காக இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ், ராகுல் சிப்லிங்குஞ்ச், கால பைரவா, இயக்குனர் ராஜமெளலி, நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்’ என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் தி மார்த்தா மிட்செல் எபெக்ட், ஸ்ட்ரேஞ்சர் அட் தி கேட், ஹவ் டூ யூ மெஷர் ஏ இயர்? மற்றும் ஹவுல்ட் ஆகிய படங்களுடன் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் மோதியது. இந்த ஆவணப்படத்தை கார்த்திகி கோன்ஸ்வால்ஸ் இயக்கி உள்ளார். கடந்த 2022 டிசம்பர் மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்த ஆவணப்படம், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து எடுக்கப்பட்டது என்பது தமிழ்நாட்டின் பெருமையாகக் கருதப்படுகிறது.
மேலும் இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றதன் மூலம், முதல் ஆஸ்கர் விருதை வென்ற இந்தியப் படம் மற்றும் 3வதாக ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் என்ற பெருமையை அடைந்துள்ளது என்பது கூடுதல் உற்சாகத்தை இந்திய சினிமாவுக்கு அளித்துள்ளது.
அதேபோல் பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த மார்ச் 25 அன்று பான் இந்தியா அளவில் வெளியான திரைப்படம், ஆர்ஆர்ஆர். டிவிவி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில், ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கான், சமுத்திரகனி, அலியா பட், ஒலிவியா மோரிஸ் போன்ற நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல், வெளியாகும்போதே சர்வதேச அளவில் கவனிக்கும் ஒன்றாக மாறியது. இதன் விளைவாக கோல்டன் குளோப் விருதையும் இப்பாடல் வென்றது. இந்த நிலையில்தான் தற்போது ஆஸ்கர் விருதையும் இப்பாடல் வென்றுள்ளது. இதன் மூலம் முதல் இந்திய திரைப்பட பாடலுக்காக ஆஸ்கர் விருது மற்றும் 2வது ஆஸ்கர் விருதைப் பெறும் இந்தியர் என்ற பெருமை ஆர்ஆர்ஆர் படக்குழுவிற்கும், கீரவாணிக்கும் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: The Elephant Whisperers: தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு ஆஸ்கர் விருது!