ETV Bharat / state

'வனத்துறையினரால் உயிரிழந்த அணைக்கரை முத்து குடும்பத்தாருக்கு நீதி வழங்கிடுக' - மு.க. ஸ்டாலின் - அணைக்கரை முத்து மரணம் குறித்து ஸ்டாலின்

சென்னை: விசாரணை என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பாக விவசாயி அணைக்கரை முத்துவை அழைத்துச் சென்று, அவரின் உயிரைப் பறித்த வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அணைக்கரை முத்து மு.க. ஸ்டாலின்
அணைக்கரை முத்து மு.க. ஸ்டாலின்
author img

By

Published : Jul 26, 2020, 7:17 PM IST

Updated : Jul 26, 2020, 8:05 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா, சட்டத்தை ஆளாளுக்கு கையில் எடுத்துக்கொண்டு ஆட்டம் போடும் அவலம் நடக்கிறதா என்ற சந்தேகமும், அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களின் கொடூரமான தாக்குதலால் தந்தை, மகன் இருவரது உயிரும் பறிக்கப்பட்ட கொடூர நிகழ்வின் ரத்தச் சுவடுகள் காயாத நிலையில், தென்காசி மாவட்டம் கடையம் அருகே வனத்துறையினரால் மற்றொரு உயிர், கொடூரமாகப் பறிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 56 வயது அணைக்கரை முத்து என்பவர் தனது வயலைப் பன்றிகள் சேதப்படுத்துவதால், அனுமதியின்றி மின்வேலி அமைத்துள்ளார். இதுதொடர்பாக விசாரிக்க ஜூலை 22ஆம் தேதி இரவு 11 மணியளவில் கடையம் சரக வன அலுவலர் நெல்லை நாயகம் தலைமையிலான வனத்துறையினர் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன்பின் நள்ளிரவு 12.30 மணியளவில் முத்துவின் மூத்த மகன் நடராஜன் வனத்துறை அலுவலகம் செல்ல முற்பட்டபோது, எதிரே வந்த வனத்துறை வாகனத்தில், தனது அப்பா பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதைப் பார்த்து அவர் விசாரித்துள்ளார். கடையம் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு வனத்துறையினர் சென்றபோது, அணைக்கரை முத்துவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என்கிற அதிர்ச்சி செய்தியைத் தெரிவித்துள்ளனர்.

அணைக்கரை முத்துவை விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் அழைத்துச் சென்ற வனத்துறையினரே அவரது உயிர் பறிக்கப்பட்டதற்குக் காரணம் என ஜூலை 23ஆம் தேதியன்று ஆழ்வார்குறிச்சி காவல் நிலையம் முன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினர் கஸ்டடியில் இருந்தபோது உயிரிழந்த அணைக்கரை முத்துவின் உடல், அவரது குடும்பத்தினர் முன்னிலையில் பகல் நேரத்தில் உடற்கூறாய்வு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், இரவோடு இரவாக உடற்கூறாய்வு நடத்தப்பட்டுள்ளது.

உயிர் பறிக்கப்பட்ட அணைக்கரை முத்து குடும்பத்தாருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் இழப்பீட்டு நிதி அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், வனத்துறையினரின் அத்துமீறலையும், அதற்கேற்ப காவல் துறை செயல்பட்டிருப்பதையும், மறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

விசாரணை என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பாக, நேரம் கடந்தும் சட்டைகூட அணிய அவகாசம் தராமலும் மனித உரிமைகளை மீறி அழைத்துச் செல்லப்பட்டு உயிர் பறிக்கப்பட்ட அணைக்கரை முத்து அவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும். இதற்கு திமுக துணை நிற்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விவசாயி அணைக்கரை முத்து மரணம் குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் - வைகோ

Last Updated : Jul 26, 2020, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.