கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவந்த பழனி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் மதுரையில் நேற்று (ஜூன் 11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்எல்ஏ அன்பழகனுக்கு இரங்கல் தெரிவித்து செய்தி ஒன்றை வெளியிடுள்ளார்.
அதில் ’’பழனி சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் எம். அன்பழகன் உடல்நலக் குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 2006 – 2011 கழக ஆட்சியின் போது, கழகத்தின் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். அவரது மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் பேரிழப்பாகும். அன்பழகன் இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாலியல் புகார்: விசாரணைக்கு ஆஜராகாத சிவசங்கர் பாபா