ETV Bharat / state

கவிஞர் பிறைசூடன் மறைவு - மு.க.ஸ்டாலின் அஞ்சலி - சென்னை மாவட்ட செய்திகள்

கவிஞர் பிறைசூடன் நேற்று மாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
author img

By

Published : Oct 9, 2021, 3:06 PM IST

Updated : Oct 9, 2021, 3:52 PM IST

சென்னை: தமிழ் திரையுலகில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பாடலாசிரியராக திகழ்ந்து வந்த கவிஞர் பிறைசூடன் நேற்று (அக்.8) மாலை 4.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 65.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கவிஞர் பிறைசூடனின் இல்லத்திற்கு இன்று (அக்.9) நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கவிஞர் பிறைசூடன் இயற்றிய ராஜாதி ராஜா திரைப்படத்தின் மீனம்மா மீனம்மா, என்னை பெத்த ராசா திரைப்படத்தின் சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி, ஆட்டமா தேரோட்டமா, நடந்தால் இரண்டடி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பாடல்கள் தமிழ் ரசிகர்களிடத்தில் இன்றளவும் புகழ்பெற்றுத் திகழ்கின்றன.

கவிஞர் பிறைசூடன் மறைவு

கவிஞர் பிறைசூடன் மறைவு

என் ராசாவின் மனசிலே மற்றும் தாயகம் திரைப்படத்திற்காக இருமுறை தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை பெற்றவர் கவிஞர் பிறைசூடன் ஆவார். அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தமிழில் ஏறக்குறைய 2000 திரைப்படப் பாடல்களை எழுதியுள்ள கவிஞர் பிறைசூடன், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் எழுதியுள்ளார்.
திருவாரூர் நன்னிலத்தை பூர்வீகமாக கொண்டவர் கவிஞர் பிறைசூடன். அவரது உடல் நெசப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நெசப்பாக்கம் மயானத்தில் இன்று மாலை 3 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் ஷியா மசூதிக்குள் குண்டுவெடிப்பு.. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Last Updated : Oct 9, 2021, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.