அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்தவித விருப்பு - வெறுப்புக்கும் உட்படுத்தாமல் அனைத்துத் தரப்பினரும் சமமான சிந்தையுடன் ஏற்றுக்கொண்டு மதநல்லிணக்கம் போற்றி நாட்டின் பன்முகத்தன்மைக்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னொடுத்துச் செல்வார்கள் என நம்புகிறேன்.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் சமமான சிந்தனையுடன் மத நல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்வார்கள்” என தான் நம்புவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், “நீண்ட நெடுங்காலமாக இருந்துவந்த பிரச்சனைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வு கண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு வழங்கியதற்கு பிறகு, அதை எந்தவித விருப்பு வெறுப்புக்கும் உட்படுத்தாமல் அனைத்து தரப்பினரும் சமமான சிந்தனையுடன் ஏற்றுக்கொண்டு, மத நல்லிணக்கம் போற்றி நாட்டின் பன்முகத்தன்மையை எவ்வித சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...அயோத்தி தீர்ப்பு: உபியில் கூடுதல் சிறைகள்!