ETV Bharat / state

'ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு அரசு கட்டணம் வசூல் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்'

சென்னை: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கட்டணம் வசூல் செய்வது குறித்து முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அட்
aட்ச்
author img

By

Published : Jan 29, 2021, 10:27 PM IST

Updated : Jan 29, 2021, 10:46 PM IST

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் இன்று மருத்துவர் குழுக்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் உலக சுகாதார நிறுவனத்தின் சௌமியா சுவாமிநாதன் பங்கேற்று பேசும்போது, தமிழ்நாடு உலகளவில் கரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக கையாண்டு கட்டுப்படுத்தியுள்ளதற்கு பாராட்டு தெரிவித்தார். பிற நாடுகளில் இரண்டாவது, மூன்றாவது அலை வரும்போது தமிழ்நாட்டில் இறப்பையும் கட்டுப்படுத்தி உள்ளோம். மருத்துவக் கட்டமைப்பை உருவாக்குவது, தொற்றை கட்டுப்படுத்துவது போன்றவற்றில் முன்னோடியாக இருக்கிறது என பாராட்டினார்.

தமிழ்நாட்டில் கோவிஷீல்டு, கோவாக்சின் 12 லட்சத்து 34 ஆயிரத்து 920 டோஸ் வந்துள்ளது. இன்றுவரையில் 97 ஆயிரம் பேருக்கு போட்டுள்ளோம். ஆரம்பத்தில் சிறிய தயக்கம் இருந்ததால், தானும், சுகாதாரத்துறை செயலாளரும் போட்டுக்கொண்டோம். அதன்பின்னர் மருத்துவர்களும், செவிலியர்களும் போட வேண்டும்.

150 மருத்துவர்கள், செவிலியர்கள் இருக்கக் கூடிய மருத்துவமனைகள் மண்டல சேமிப்பு கிடங்கிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். பெரிய தனியார் மருத்துவர்களும், சிறிய மருத்துவமனை பணியாளர்களும் அரசின் கரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.

சுகாதாரத் துறை முன்கள பணியாளர்களை தொடர்ந்து ஒன்றாம் தேதியில் இருந்து பிற துறையைச் சேர்ந்த முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. காவல் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த்துறை பணியாளர்களும் போட்டுக்கொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து போடும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். 70 லட்சத்து 13 ஆயிரம் குழந்தைகளுக்கு 43 ஆயிரம் மையங்களில் போடப்பட உள்ளது. 17 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

முன்கள பணியாளர்கள் 6 லட்சம் பேர் பதிவு செய்ததில் இதுவரை ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். காவல் துறை 1 லட்சத்து 55 ஆயிரம் பேரும், உள்ளாட்சி துறையில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேரும், வருவாய் துறையில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அரசு பல்கலைக்கழகமாக மாற்றினார். அதனைத் தொடர்ந்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகதாரத் துறைக்கு கீழ் கொண்டு வந்தால் வளர்ச்சி ஏற்படும் என்பதால் அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து உயர்கல்வித் துறையின் கீழ் இருந்ததை சுகாதாரத் துறைக்கு கீழ் கொண்டு வந்தனர். அதில் போராடக்கூடிய மாணவர்களில் இந்த ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு அரசுக் கட்டணம் வேண்டும் என்பதுதான் .அதையும் இந்தாண்டு முதலைமச்சர் பரிசீலனை செய்து நல்ல முடிவினை அறிவிப்பார்.

மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிவரும் செவிலியர்கள் அனைவருக்கும் விரைவில் பணி வாய்ப்பு கிடைக்கும்.

விஜயபாஸ்கர்

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் உள்ள காலி பணியிடங்களில் செவிலியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். தற்போது 1,300 செவிலியர்கள் பணி மூப்பு, காலி பணியிடங்களுக்கு ஏற்ப பணியமர்த்தப்படுவார்கள்
தமிழ்நாட்டில் 792 மினி கிளினிக்குள் தொடங்கப்பட்டுள்ளன” என்றார்.

Last Updated : Jan 29, 2021, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.