ETV Bharat / state

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மேலும் கூடுதல் இடங்கள்? அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் - additional seats for medical students

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மேலும் கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Minister vijayabaskar about additional medical seats for govt school students

author img

By

Published : Nov 24, 2020, 6:51 AM IST

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் பொதுப்பிரிவு கலந்தாய்வில் முதல் பத்து இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கி பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதால் அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே இன்று நடைபெற்ற கலந்தாய்வில் முதல் 15 இடங்களை பிடித்த மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.

அரசு பள்ளி மாணவர்கள் தனியார் கல்லூரியில் இடங்களைத் தேர்வு செய்தால் அவர்களுக்கான கட்டணங்கள் முழுவதையும் அரசே வழங்கும் என முதலமைச்சர் 18ஆம் தேதி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் முறையை கூறினர்.

அதுமட்டுமில்லாமல் 18ஆம் தேதியே சுயநிதி கல்லூரிகளில் மாணவர்கள் கட்டணத்தை செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக சேர்க்கை நிறுத்தக்கூடாது என மருத்துவக் கல்வி இயக்குநரகம் கடிதம் அனுப்பியது. அரசு பள்ளி மாணவர்கள் சிலர் தங்களின் சூழ்நிலை காரணமாக இடங்களை தேர்வு செய்யாமல் விட்டுச்சென்றனர். சில மாணவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு

அரசு பள்ளியில் படித்து தனியார் மருத்துவ கல்லூரியில் இடங்களை தேர்வு செய்துவிட்டு கட்டணம் செலுத்த முடியவில்லை என ஒதுக்கீட்டு ஆணை பெறாமல் சென்ற 3 மாணவர்களுக்கு இன்று அழைத்து ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டுவருகிறது. மருத்துவ கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களில் விடுபட்டவர்களுக்கு புதிய வாய்ப்பு உருவாக்குவது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மருத்துவ படிப்பில் சில கல்லூரிகளுக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அனுமதிக்கப்பட்ட இடங்கள் கிடைத்தால் அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் கூடுதல் இடங்கள் கிடைக்கும். மேலும் வரும் கல்வியாண்டில் தொடங்கப்பட உள்ள 11 புதிய அரசு மருத்துவ கல்லூரி மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடங்கள் அதிகரிக்கும்'' என்றார்.

இதையும் படிங்க: வறுமையால் வாய்ப்பிழந்த மாணவிகளின் மருத்துவக் கனவை நிறைவேற்றிய அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.