ETV Bharat / state

தமிழ் புத்தாண்டு தேதி : முதலமைச்சர் முடிவு என்ன? அமைச்சர் பதில்!

தமிழ் புத்தாண்டு எப்போது என்பதைத் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இறுதி முடிவு எடுப்பார் என செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Dec 12, 2021, 7:26 AM IST

தமிழ் புத்தாண்டு தேதி எப்போது
தமிழ் புத்தாண்டு தேதி எப்போது

சென்னை: மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள மகாகவி பாரதியார் திருவுருவ சிலைக்கும் கீழே வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சாமிநாதன், தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது, "பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அண்ணா ஆட்சிக்காலத்தில்தான் பாரதியாரின் சிலை அமைக்கப்பட்டது என்றார்.

மகாகவி பாரதியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா

மேலும், தலைவர்களின் சிலைகள் திறந்த வெளியில் இருப்பதால் தான் பொதுமக்கள் பார்வைக்கு எளிதாக இருக்கும் எனவும் சிலைகள் சேதம் அடையாமல் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இதனையடுத்து, தை 1 ஆம் தேதி மீண்டும் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு, "தமிழ்ப்புத்தாண்டு குறித்து முதலமைச்சர் இறுதி முடிவெடுப்பார்" என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார் .

இதையும் படிங்க: நரிக்குறவர் தம்பதியின் காலில் பாலாபிஷேகம் செய்து பேருந்து ஊழியர்கள் வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.