ETV Bharat / state

நீட் விலக்கு நமது இலக்கு: '0' எடுத்தாலே போதுமென நீட் எதுக்கு? முட்டையை காண்பித்து விமர்சித்த உதயநிதி!

DMK launch Massive Signature drives: நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் மாபெரும் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சியில், நீட் தேர்வை முட்டையைக் காட்டி விமர்சனம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் விலக்கு கோரி போராடுவதற்கு அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 5:35 PM IST

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கட்சி பாகுபாடின்றி தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க வருமாறு அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு, திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

நீட் தேர்வில் (NEET Exemption Bill) இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி திமுக சார்பில் 'கையெழுத்து இயக்கம்' இன்று (அக். 21) தொடங்கியது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் முதல் கையெழுத்தையிட்டார்.

50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் மாணவர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலதரப்பினரிடம் கையெழுத்து பெற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி, "இன்று 'நீட் விலக்கு நமது இலக்கு' என்ற பெயரில் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நாம் தொடங்கி இருக்கிறோம்.

கடந்த 3 நாட்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. கண்ணில் சிறிய இன்ஃபெக்ஷன். 4 நாட்கள் வரை எங்கேயும் செல்ல வேண்டாம், நன்றாக ஓய்வெடுங்கள் என மருத்துவர்கள் எனக்கு ஆலோசனை வழங்கினார்கள். ஆனால், ஏற்கனவே நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்க நிகழ்வு முடிவாகிவிட்டதால், கண்டிப்பாக நான் கலந்து கொள்ள வேண்டும் என இதில் பங்கேற்றுள்ளேன்.

எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் யாரும் நீட் தேர்வு எழுதவில்லை. திமுக நடத்தும் இந்த நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை நாம் மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி அதன் மூலம் நீட் தேர்வை நாம் ஒழிக்க வேண்டும். நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்படும் பாதிப்பை மத்திய அரசு புரிந்துகொள்ள மறுப்பதால் நீட் மசோதா கடந்த 21 மாதங்களாக குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது .

இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும்படி, பலமுறை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசு தலைவருக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு வந்தால் நல்ல தரமான மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்று கூறிய மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது.

Udhaynidhi Stalin
Udhaynidhi Stalin

முதுகலை படிப்பதற்கு பூஜ்ஜிய சதவீதமே போதுமானது என்று தெரிவித்து உள்ளது. பூஜ்ஜிய சதவீதம் என்பதை உணர்த்த கையில் முட்டையை காட்டி உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், "சும்மா போய், நீட் எழுதிட்டு வா, பணம் கொடுத்து சீட் வாங்கிடலாம். இப்படிதான் நிலைமை இருக்கிறது.

இது எவ்வளவு பெரிய அயோக்கியதனம் தெரியுமா?. எங்கேயாவது இப்படி நடக்குமா?. முதலில் இந்தி திணிப்பில் தொடங்கி புதிய கல்விக் கொள்கை (New Education Policy) என்று நமது கல்வி உரிமையை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

அதனை எதிர்த்து நாமும் தொடர்ந்து போராடி வருகிறோம். நீட் எதிர்ப்புக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம். குறிப்பாக, தமிழகத்தின் கல்வி உரிமையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நம் கல்வியை சிதைக்க, நாம் அனுமதிக்க மாட்டோம் என்பதற்கான அடையாளம் தான் இந்த கையெழுத்து இயக்கம்.

நீட் ஒழிப்பிற்கு பெறப்படும் கையெழுத்துகள் அனைத்தும் டிசம்பர் மாதத்தில் இளைஞர் அணி சார்பாக நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசு அலட்சியம் காட்டினால், மீண்டும் ஒரு போராட்டம் நடக்கும். குறிப்பாக, ஜல்லிகட்டைப் போன்று வீரமிக்க போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, திமுக எம்பி கனிமொழி, என்.வி.என்.சோமு, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் மற்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "என் கருத்துகளை லைக் செய்தால் போதாது... ஷேர் செய்யுங்கள்.. உங்கள் விமர்சனம் ஆன்டி வைரஸ் அலர்ட்" - சமூகவலைதள தன்னார்வலர்கள் மாநாட்டில் முதலமச்சர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.