ETV Bharat / state

ஓபிஎஸ்-ஈபிஎஸ் மாதிரி இருக்க வேண்டாம்.. கல்யாண வீட்டில் அமைச்சர் உதயநிதி காமெடி! - சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன்

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் போல் கமலாலயம் செல்லமாட்டோம் எனக்கூறியப் பின், அங்கு சென்று காத்திருப்பது மானம் கெட்ட செயல் எனவும் இவ்வாறாக இல்லாமல் திருமண தம்பதிகள் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 23, 2023, 3:42 PM IST

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் போல் இல்லாமல் திருமண தம்பதிகள் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமெனத் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் ஆறு 78வது வார்டில் ரூ.6.02 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தைத் திறந்து தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன.23) வைத்தார். இதனைத்தொடர்ந்து, 9 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்து திருமண தம்பதிகளுக்குத் தேவையான பீரோ, கட்டில், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'கேடுகெட்ட வெட்கமில்லாத ஒரு எதிர்க்கட்சியாக அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இருப்பதாகவும், அவ்விரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு கமலாலயத்தில் வெட்கங்கெட்ட வகையில் காத்திருப்பதாகக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும் பேசிய அவர், மணமக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தமிழும் கலைஞரும் போல, ஸ்டாலினும் உழைப்பும் போல இருக்க வேண்டும் என வாழ்த்துக்கள் என்றார். அத்துடன் மணமக்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் ஒரு எடுத்துக்காட்டு கூறுவதாக தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் போல் சுயமரியாதையை விட்டுக்கொடுத்து விடாதீர்கள் எனவும் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் என்னுடைய காரில் தவறுதலாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏறச் சென்றனர். ஆனால், அப்போது காரில் ஏறினாலும் பரவாயில்லை கமலாலயத்திற்கு மற்றும் சென்று விடாதீர்கள் என்று சொன்னேன். எந்த காலத்திலும் எங்கள் கார் கமலாலயம் போகாது என அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் சொன்னார். ஆனால், நேற்று இரண்டு மணி நேரம் கார் கமலாலயத்தில் காத்திருந்தது. இது மானம் கெட்ட செயல்' எனக் குறிப்பிட்டார்.

9 ஜோடிகளுக்கு இலவச திருமண செய்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், ஜோசப் சாமுவேல், வெற்றிழகன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், ப.ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்க பலம் வாய்ந்த கட்சி அதிமுக -அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.