ETV Bharat / state

ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4; முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

Chennai formula 4: சென்னையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள "ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4" பந்தயத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 8:12 AM IST

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் புரோமோ பிரைவேட் லிமிடெட் ஆகியோர் இணைந்து நடத்தும், "ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4" என்கிற கார் பந்தயம், வரும் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.

இரவு நேரத்தில் நடைபெறும் இந்த கார் பந்தயத்திற்காக, பிரத்யேக சாலை அமைக்க 7 கோடி ரூபாய்க்கு மேலாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், பந்தயத்திற்கு ஏற்றார் போல சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இரவு, பகல் முழுவதும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  • சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி நடைபெறவுள்ள இரவு நேர ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4 போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து விளையாட்டு மேம்பாட்டுத் துறை - காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டோம்.

    மேலும், இந்தப் போட்டிக்கான… pic.twitter.com/aq7zXl778l

    — Udhay (@Udhaystalin) November 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

குறிப்பாக, சுவாமி சிவானந்தா சாலை, தீவுத்திடல், அண்ணாசாலை பகுதி மற்றும் நேப்பியர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நடைபாதைகள், தடுப்புகள் மற்றும் சாலைகள் அகற்றப்பட்டு, பந்தய தூரமான 3.5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சீரமைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கருத்தரங்குகளில் மது விநியோகிப்பது சட்டத்திற்கு எதிரானது - சென்னை உயர் நீதிமன்றம்]

இந்நிலையில், நேற்று (நவ.24) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4" பந்தயத்திற்கான பிரத்யேக சாலையை அமைக்கும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில், கார் ரேஸ் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

  • இந்திய ஒன்றியத்திலேயே முதல் முறையாக இரவு நேர ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் போட்டிகள் சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

    3.7 கிமீ தூரத்திலான இப்போட்டிகளுக்குரிய ஓடுதளம் அமைக்கும் பணி உள்ளிட்ட முன்னேற்பாடுகளை சென்னை தீவுத்திடலை ஒட்டிய பகுதிகளில்… pic.twitter.com/9QgYwpg89j

அதில், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று, கார் ரேஸ் பந்தயத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். அதனை அடுத்து "ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4" நிகழ்விற்கான டிக்கெட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த போட்டிக்கான பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.