ஆலங்குடி தொகுதி மேற்பனைக்காடு ஊராட்சி மேலக்காடு புது குடியிருப்பில் மின்மாற்றி அமைக்க அரசு ஆவனசெய்யுமா என சட்டப்பேரவை உறுப்பினர் வீ. மெய்யநாதன், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு, மேலக்காடு புது குடியிருப்பில் 100 கிலோவோல்ட் திறன்கொண்ட மின்மாற்றி இருக்கிறது. அதில் 80 கிலோவோல்ட்தான் பயன்படுத்தப்படுகிறது. மேற்கொண்டு தேவைப்பட்டால் மின்மாற்றி அமைத்து தரப்படும் என அமைச்சர் தங்கமணி பதிலளித்தார்.
ஆண்டுதோறும் 50 முதல் 60 துணைமின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. டெல்டா மாவட்டங்களில் மின்னழுத்தம் குறைவாக இருக்கும் இடங்களில் மின்மாற்றி அமைக்க ஏற்பாடு செய்யப்படும். கடந்த நான்கு ஆண்டுகளில் 340 துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரசித்திப்பெற்ற கோயில்களில் அனுமதி கிடையாது