ETV Bharat / state

டைனோசர் மாதிரிகளைக் கொண்டு பூங்கா- அமைச்சர் தங்கம் தென்னரசு

அரியலூர் அருங்காட்சியக வளாகத்தில் தானியங்கி டைனோசர் மாதிரிகளைக் கொண்டு திறந்தவெளியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கருப்பொருள் பூங்கா அமைக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Sep 4, 2021, 8:39 PM IST

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசுஅமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த திமுக அரசு, ஆகஸ்ட் 13ஆம் தேதி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்தது.

வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், பல்வேறு துறைகளில் அறிவிக்கப்பட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று (செப்.4) சட்டப்பேரவையில் சுற்றுலா மற்றும் தொழிலாளர் நலத்துறை தொடர்பான திட்டங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:

  1. சுற்றுலா தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் தொல்லியல் நிறுவனத்தினை, தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மறுசீரமைக்கப்படும்.
  2. தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள முதலைகுலம், அரிட்டாபட்டி, சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொண்டூர், நேகனூர்பட்டி ஆகிய இடங்களில் உள்ள ஐந்து தமிழ் கல்வெட்டுகள் தமிழ்நாடு அரசின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும்.
  3. தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் தற்போது நடைபெற்றுவரும் கீழடி, சிவகலை, மயிலாடும்பாறை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய அகழாய்வு பகுதிகளுடன் சேர்த்து புதியதாக வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை உள்ளிட்ட பகுதிகள் என மொத்தம் 7 இடங்களில் அறிவியல் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
  4. தமிழ்நாட்டில் கீழ்வாலை, செத்தவரை, ஆலம்பாடி, திருமலை, மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் உள்ள பாறை ஓவியங்கள், பண்டைய மக்களின் கலை ஈடுபாடு, சமூக வாழ்க்கை போன்றவற்றை அறிந்து கொள்ளும் காலக் கண்ணாடியாக திகழ்கின்றன. ஓவியங்களை நவீன முறையில் ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நோக்கில், தமிழ்நாட்டிலுள்ள 90க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் ஆவணப்படுத்தப்படும். 2001 - 2022 ஆம் ஆண்டு ரூ.20 லட்சமும், 2022 - 2023ஆம் ஆண்டு ரூ.40 லட்சமும் என இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  5. பண்டைய நகரங்களின் தொன்மை வரலாறு, பண்பாடு முதல் இவற்றை முழுமையாக வடிவமைத்து அறிந்துகொள்ள உதவும் முக்கியமான சான்றாகக் கல்வெட்டுகள் திகழ்கின்றன. வரலாற்றினை மறுகட்டமைப்பு செய்ய துணையாக உள்ள கல்வெட்டுகளைப் படி எடுக்க, தொல் பொருட்களை நேரடியாக முப்பரிமாண வடிவில் ஆவணப்படுத்தும் நவீன தொழில்நுட்ப 3டி ஸ்கேனர்கள், உயர்தர கணினிகள், உபகரணங்கள் வாங்கிட ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  6. தொல்லியல் நிறுவனத்தில் புதியதாக கல்வெட்டில் ஈராண்டு முதுநிலை பட்டய வகுப்புகள் தொடங்கப்படும். புதிய முதுநிலை பட்ட வகுப்பில் கல்வெட்டியல் தொடர்பான அனைத்து பாடங்களும், செய்முறைப் பயிற்சிகளும், கல்வெட்டு வல்லுநர்களைக் கொண்டு அளிக்கப்படும். தொடர்ந்து ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ஒன்றுக்கு உதவி தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 2021 - 2022ஆம் நிதி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட ரூ. 40 லட்சமும், 2022 - 2023ஆம் ஆண்டிற்கு ரூ.40 லட்சமும் என்ற வகையில், மொத்த செலவினமான ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  7. சிவகங்கை மாவட்டம் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த ஒரு புதிய அகழாய்வு கட்டுமான பணிகள் ரூ.12.21 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இவை 31 ஆயிரம் சதுர அடியில் ஆறு அங்கங்களுடன் கீழடியின் தொன்மை மற்றும் தமிழர்களின் பண்பாட்டை உலகிற்கு உணர்த்தும் வண்ணம் உருவாக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு 34 நிரந்தர பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும், பராமரிப்பு பயன்பாட்டிற்கு தொடரும் செலவாக ரூ. 1.38 கோடி தொடராச் செலவினமாக, ரூ. 20 லட்சமும் ஆக மொத்தம் ரூ. 1.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  8. சென்னை அரசு அருங்காட்சியகத்தில் தொல்பொருளியல் தொகுப்பு கண்காட்சிகளை விரிவு படுத்தும் விதமாக புதிய கட்டடம் கட்டி அரும்பொருட்களை பன்னாட்டு தரத்தில் காட்சி்படுத்தப்படும்.
  9. சென்னை அரசு சிறுவர் அருங்காட்சியகத்தை விரிவுபடுத்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை விளக்கும் விதமாக அறிவியல் மையம் அமைக்கப்படும்.
  10. அரசு அருங்காட்சி எண்களில் உள்ள அனைத்து அரும் பொருள்களையும், அறிவியல் முறையில் பாதுகாத்து இறக்கம் செய்து ஆவணப்படுத்தி, அனைத்தையும் மெய்நிகர் காட்சிகளாக வடிவமைத்து, வலைதளத்தில் பதிவேற்றும் பணி ரூ.5 கோடி செலவில் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும்.
  11. அருங்காட்சியகங்கள் துறையின் காப்பாட்சியர்கள் மற்றும் உயர் அலுவலர்களுக்கு, இந்திய மற்றும் உலக அளவில் சிறப்பு பெற்ற அயல் நாட்டு அருங்காட்சியகங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
  12. அரியலூர் புதையுயிரி படிவவ அருங்காட்சியக வளாகத்தில் உலக அளவில் ஆய்வு செய்யத்தக்க வகையில் தானியங்கி டைனோசர் மாதிரிகளைக் கொண்டு திறந்தவெளியில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் கருப்பொருள் பூங்கா அமைக்கப்படும்.
  13. தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் சிறப்பு பாரம்பரியத்தை உலகறியச் செய்யும் வகையில், லெய்டன் செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு மீண்டும் திரும்ப கொண்டு வரப்படும்.
  14. சோழப்பேரரசின் மரபு மற்றும் தொன்மையை விளக்கும் அன்பில் செப்பேடுகளைக் கண்டுணர்ந்து, சென்னை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும்.
  15. சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் கடந்த 1909ஆம் ஆண்டு இந்தோ - சார்னிசானிக் கட்டட கலை வடிவத்தில் கட்டப்பட்டுள்ள பாரம்பரிய வேலைப்பாடுகள் மிகுந்த தேசிய கலைக்கூடம் அமைந்துள்ளது. இந்த கட்டடத்தின் கலை வடிவங்களின் மேல், லேசர் தொழில்நுட்ப ஒலி-ஒளி காட்சி அமைத்து, தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பண்பாடு குறித்த தகவல் அடங்கிய கண்கவர் நிகழ்ச்சிகள் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும்.
  16. 75ஆவது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை கொண்டாடும் நோக்கிலும், நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவிடும் வகையிலும், தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலைகளை 75 ஒளிப்படங்களாக தயாரித்து இணையவழியில் வெளியிடப்படும்.
  17. தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள் இடம்பெறும் வகையில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சென்னையில் இணையவழி மூலம் பிரமாண்ட கலைவிழா நடத்தப்படும்.
  18. இளைஞர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொணர, ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட, மாநில கலைப் போட்டிகள் நடத்தப்படும். தொடர்ந்து இளையோருக்கான மாநில கலைவிழா இணையவழி மூலம் நடத்தப்படும்.
  19. 500 நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் வாயிலாக ஆண்டுதோறும் இசைக்கருவிகள், ஆடை, ஆபரணங்கள் வாங்க நிதி உதவி வழங்கப்படும்.
  20. கலைமாமணி விருது பெற்ற வரிய நிலையில் வாழும் கலைஞர்களுக்கு, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் ஒருமுறை வழங்கப்படும் பொற்கிழித் தொகை ரூ. 50 ஆயிரத்திலிருந்து, ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும்.
  21. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் நடத்தப்பட்ட முத்தமிழ் முகாம் பயிற்சிக்கான தொகை உயர்த்தப்படும்.
  22. கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் சார்நிலை அலுவலகங்கள், கல்லூரிகள், மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆகியவற்றிற்கு கணினிகள், அச்சு இயந்திரங்கள், ஒளி அச்சு இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும்.
  23. வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.

மேற்கண்டவை சட்டப்பேரவை நடவடிக்கையின் போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவால் அறிவிக்கப்பட்டன.

இதையும் படிங்க: மொட்டையடிக்க கட்டணமில்லை, வள்ளலார் சர்வதேச மையம்; அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் 112 புதிய அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.