சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (பிப்.25) இரண்டாம் நாள் சட்டப்பேரவைக் கூட்டுத்தொடர் நடைப்பெற்றது. பேரவை தொடங்கியதும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதன் பின் கேள்வி நேரத்தின்போது, மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திருவிழா காலங்களில் முயல்கள் வேட்டையாடி சாமி கும்பிட அதற்காக அனுமதி அளிக்க வேண்டுமென மேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பெரியபுள்ளான் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், விலங்குகளை கொள்வதற்கும் வதம் செய்வதற்கும் யாருக்கும் அதிகாரம் கிடையாது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் சுற்றித் திரியும் முயல்கள், மான்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். எந்த ஒரு விலங்கையும் வதம் செய்யாமல் சைவமுறைப்படி சாமி கும்பிடுங்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இந்த ஆட்சி எவ்வளவு கேவலமா போய்கிட்டு இருக்கு': அமைச்சரின் அடுத்த உளறல்