ETV Bharat / state

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு - லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை! - எஸ்பி வேலுமணி மீதான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளரின் விசாரணையை, அத்துறை இயக்குநர் நேரடியாக கண்காணித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high court
author img

By

Published : Oct 18, 2019, 1:55 PM IST

சென்னை, கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அமைச்சர் வேலுமணி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, உறவினர்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக்கோரியும் அறப்போர் இயக்கம், திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் ஏற்கனவே நீதிபதி சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், 'முறைகேடு புகாரில் 349 டெண்டர்கள் குறித்த ஆரம்ப கட்ட விசாரணையில், 41 நிறுவன ஆவணங்களின் விசாரணை முடிந்து விட்டதாகவும், வழக்கில் 250 சாட்சிகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்த உத்தரவில் ஓராண்டு காலம் முடிந்தும் ஆரம்ப கட்ட விசாரணையை கூட சரியாக செய்யவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.

அதனால், லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் பொன்னி விசாரணையை நடத்த வேண்டும் எனவும், அதை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் நேரடியாக கண்காணித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மூவரின் பிணை மனு தள்ளுபடி!

Intro:Body:அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை கண்கானிப்பாளரின் விசாரணையை அத்துறை இயக்குநர் நேரடியாக கண்கானித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கோவை மாநகாரட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அமைச்சர் வேலுமணி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, உறவினர்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி அறப்போர் இயக்கம், திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்குகள் ஏற்கனவே நீதிபதி சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், முறைகேடு புகாரில் 349 டெண்டர்கள் குறித்த ஆரம்பகட்ட விசாரணையில், 41 நிறுவன ஆவணங்கள் விசாரணை முடிந்து விட்டதாகவும், வழக்கில் 250 சாட்சிகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கடந்த ஜனவரி பிறப்பித்த உத்தரவஇல் ஓராண்டு காலம் முடிந்தும் ஆரம்பகட்ட விசாரணையை கூட சரியாக செய்யவில்லை.

அதனால், லஞ்ச ஒழிப்புத்துறை கண்கானிப்பாளர் பொன்னி விசாரணையை நடத்த வேண்டும் எனவும், அதை லஞ்ச ஒழிப்புதுறை இயக்குனர் நேரடியாக கண்கானித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.