ETV Bharat / state

கரோனா தடுப்புப் பணிகள்: அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் - minister sp velumani meeting latest news

சென்னை: மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

minister sp velumani
minister sp velumani
author img

By

Published : Apr 21, 2020, 3:07 PM IST

Updated : Apr 21, 2020, 4:55 PM IST

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டத்தின்போது அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதாவது:

  • ஊழியர்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள் முழுமையாக வழங்கவும், கிருமிநாசினிகள் இரண்டு மாத இருப்பை உறுதிசெய்ய வேண்டும்.
  • அம்மா உணவகம், சமுதாய சமையல் அறைகளுக்கு ஒரு அலுவலரைப் பொறுப்பாக்கி, செயல்முறை ஆணைகள் வெளியிட்டு, அவர்களின் தொலைபேசி எண்கள் விளம்பரம் செய்து மூன்று வேளையும் கண்காணித்திட வேண்டும்.
  • தினசரி காய்கறிச் சந்தைகளில் செயல்பாடு, தள்ளுவண்டிகள் தெருக்களில் நியாயவிலையில் விற்பதை உறுதிசெய்ய வேண்டும்.
    அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
  • நோய்த்தொற்று உள்ளவர்களின் வீடுகளில் தனியே குப்பை சேகரித்திடவும், அனைத்து தூய்மைப் பணியாளர்கள், பாதாளச் சாக்கடைப் பணியில் ஈடுபடுவோருக்கு கையுறை, காலுறை, முகக்கவசம் போன்றவை அணிந்து செயல்படுகிறார்களா என்பதை அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
  • தூய்மைப் பணியாளர்கள் அடிக்கடி கைகழுவ போதிய சோப்புகளை உள்ளாட்சி அலுவலர்கள் வழங்க வேண்டும்.
  • அனைத்து நிவாரண உதவிகளும் பயனாளிகளுக்கு உடனடியாகச் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 1500 கிலோ அரிசி மூட்டைகளை வழங்கிய அமைச்சர்!

Last Updated : Apr 21, 2020, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.