ETV Bharat / state

‘வரலாற்றில் இல்லாத வகையில் 1.17 லட்சம் மில்லியன் யூனிட் மின்சாரம் விநியோகம்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத வகையில் 1.17 லட்சம் மில்லியன் யூனிட் மின்சாரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி

author img

By

Published : Aug 3, 2022, 5:12 PM IST

Updated : Aug 3, 2022, 6:19 PM IST

சென்னை அண்ணாசாலை மின் வாரிய தலைமை அலுவலகத்திலுள்ள மாநில மின் பகிர்மான கழக மையத்தில் துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, "தமிழ்நாட்டில் மழைக்காலத்தில் தடையில்லாமல் மின்சாரம் விநியோகிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நேற்று (ஆக. 02) 14ஆயிரத்து 433 மெகாவாட் மின்சாரப் பயன்பாடு இருந்த நிலையில் இன்று (ஆக.03) 12 ஆயிரத்து 400 மெகவாட் என்ற அளவில் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டின் மின் தேவை முந்தைய ஆண்டுகளை விட இந்தாண்டு அதிகரித்துள்ளது. சோலார் மூலம் 2020-21ஆம் ஆண்டில் 6ஆயிரத்து 115 மெகாவாட், 2021-22ஆம் ஆண்டில் 7ஆயிரத்து 203 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2021 - 2022ஆம் ஆண்டு, இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் 1.17 லட்சம் மில்லியன் யூனிட் மின்சாரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சருக்கு நெருங்கிய தொடர்புடைய ஒருவர் மின்னகத்திற்குத் தொடர்பு கொள்ளாமல் புகார் தெரிவித்ததாக சமூக வலைத்தளத்தில் தவறான கருத்து பரப்பியுள்ளார்.

இதேபோல் பாஜகவைச்சேர்ந்த ஒருவரும் தவறான கருத்தைத்தெரிவித்துள்ளார். அவர்கள் மீது புகார் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின் நுகர்வுக்கட்டணம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது; நிலைக்கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலைக்கட்டணம் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. மேலும், பராமரிப்புப்பணிகளைத் தவிர, மழையின் காரணமாக தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் மின் விநியோகம் தடைபடவில்லை" எனக் கூறினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி

இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை;என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்? - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

Last Updated : Aug 3, 2022, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.