ETV Bharat / state

V Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்! - சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 14, 2023, 6:56 PM IST

சென்னை: கடந்த மே 26 ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் சோதனையிட சென்றபோது வருமானவரித்துறை அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டு கார் கண்ணாடியை உடைத்தனர்.

இதை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டு 20 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், வருமானவரித்துறை சோதனை ஜூன் இரண்டாம் தேதி வரை 8 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவரது சகோதரர் வீட்டில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இதனை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை ஏதும் நடைபெற்றுள்ளதா? என விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் (ஜூன் 13) செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்தனர்.

அமலாக்கத்துறை சோதனை: நேற்று (ஜூன் 13) காலை செந்தில் பாலாஜி வீடு அமைந்துள்ள மன்மங்கலம், கரூர் நகர் பகுதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ணபுரம், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீடு, கரூர் வெங்கமேடு சண்முக செட்டியார் வீடு, கரூர் ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் சுப்பிரமணியன் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முதலில் சோதனையை துவக்கிய நிலையில், செந்தில் பாலாஜியின் உதவியாளர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள கார்த்திக் வீட்டில் சோதனை செய்தனர்.

இதன் பின்னர், குளித்தலை அருகே உள்ள லாலாபேட்டை ஆடிட்டர் திருநாவுக்கரசு அலுவலகம், கரூர் - ஈரோடு சாலையில் உள்ள ராமவிலாஸ் துணிக்கடை உரிமையாளர் ரமேஷ்பாபு, கரூர் கடை வீதியில் உள்ள பழனி முருகன் ஜுவல்லரி உரிமையாளர் வீடு மற்றும் கடை, கரூர் செங்குந்தபுரம் சாலையில் உள்ள ஆடிட்டர் சதீஷ்குமார் அலுவலகம் என 9 இடங்களில் சோதனை செய்தனர்.

தொடர்ந்து, சென்னை கிரீன்வேஸ் (பசுமை வழிச்சாலை) சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் மத்திய துணை ராணுவப்படை துணையுடன் மூன்று வாகனத்தில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

செந்தில்பாலாஜி கைது: அதிகாலையில் சோதனையை நிறைவு செய்த அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அமைச்சர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை சிகிச்சை தேவைப்படும், இதயத் துடிப்பு சீராக இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜர்: கைது நடவடிக்கையை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால் நேரில் ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து, 'நீதிபதி அல்லி' நேரடியாக மருத்துவமனைக்கு சென்றார். அங்கே செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து விசாரணை செய்த நீதிபதி, செந்தில் பாலாஜியை ஜூன் 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சார்பாக ஜாமீன் மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: V Senthil Balaji: செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு: நீதிபதி சக்திவேல் திடீர் விலகல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.