ETV Bharat / state

"தன் தவறுகளை மறைக்கவே செந்தில்பாலாஜி வழக்கு" - பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பதில் மனு! - சென்னை உயர் நீதிமன்றம்

தனது தவறுகளை மறைக்கவே தன்னை பற்றி பேசக்கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்துள்ளதாக தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Minister
Minister
author img

By

Published : Nov 29, 2022, 3:23 PM IST

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை மற்றும் மதுபான கொள்முதல் தொடர்பாக மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

தம்மை பற்றி அவதூறு கருத்துகளை பேச நிர்மல்குமாருக்கு தடை விதிக்கக்கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிர்மல்குமாருக்கு கருத்துக்களை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் நிர்மல் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடு செய்ததற்கான போதிய ஆதாரம் உள்ளதாகவும், தனது முறைகேடுகளை மறைப்பதற்காகவே தனக்கு எதிரான இந்த வழக்கை அவர் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் அளித்திருந்த ஒரு பேட்டியில் மது விற்பனையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்- அதனை அடிப்படையாக கொண்டே புகார் அளித்திருந்தாகவும், எனவே தனது குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என செந்தில்பாலாஜி கூறுவது ஏற்புடையதல்ல என்றும் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி குறித்து பேச தடை விதிக்கப்பட்டது தமது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்பதால் அந்த தடையை நீக்க வேண்டும் எனவும், செந்தில்பாலாஜி வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் நிர்மல் குமார் தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு ..! சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.