ETV Bharat / state

’அண்ணாமலையுடன் நேரடியாக விவாதிக்க தயார் ’ - அமைச்சர் செந்தில் பாலாஜி சவால்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் என்றும், தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக அவருடன் நேரடியாக விவாதிக்க தயார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை செந்தில் பாலாஜி
அண்ணாமலை செந்தில் பாலாஜி
author img

By

Published : Oct 22, 2021, 3:44 PM IST

சென்னை: பி.ஜி.ஆர் தனியார் நிறுவனத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளதாகவும், இது தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

செந்தில் பாலாஜி - அண்ணாமலை மோதல்

இதனையடுத்து மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் இடையே இணையத்தில் கடும் வாதம் தொடர்ந்து வருகிறது. நேற்று முன் தினம் இருவரும் தங்களது ட்விட்ட்ர் பக்கங்களின் வாயிலாக தொடர்ந்து இதுகுறித்த விளக்கங்களை முன்வைத்து விவாதித்து வந்தனர்.

இந்நிலையில், சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அண்ணாமலை அடுத்த 24 மணி நேரத்துக்குள் செய்தியாளர்களை சந்தித்து அவரது குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

முன்னதாக மின் வாரிய அலுவலகத்தில் உள்ள நுகர்வோர் குறைதீர்ப்பு மையமான மின்னகத்தில் ஆய்வு செய்த அமைச்சர், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”மின்னகம், மின்நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டு மின்துறை சார்ந்த பொதுமக்களின் புகார்கள் பெறப்பட்டு விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 4,14,152 புகார்கள் பெறப்பட்டு, அதில் 4,06,846 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 98 விழுக்காடு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இதுவரை 25,292 மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 700 பில்லர் பாக்ஸ் மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல் 7,000 சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. 3,337 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில் மழையினால் 101 மின்மாற்றிகளில் 14 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சரிசெய்ய மதுரையிலிருந்து மின் மாற்றிகள் கொண்டு வரப்பட்டு மாற்றப்பட்டுள்ளன.

பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய 93,000 மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளது” என்றார்.

அரசியல் அரிச்சுவடி தெரியாத அண்ணாமலை!

தொடர்ந்து பேசிய அவர், தனியார் நிறுவனத்துக்கு சிறப்பு சலுகை வழங்குவது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து தெரியவில்லை என்றால், தெரிந்து கொண்டு பாஜக தலைவர் அண்ணாமலை பேச வேண்டும் என்று தெரிவித்தார்.

“அவரைப் போல சமூக வலைதளத்தில் மட்டும் பணி செய்பவன் நான் இல்லை. பொது வாழ்வில் 25 ஆண்டுகளாக இருக்கிறேன். அண்ணாமலைக்கு அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாது. தலையில் களிமண் மட்டும் தான் உள்ளது. அரைவேக்காட்டுத்தனமாக ஆதாரமில்லாமல் கண்டபடி உளறி வருகிறார். அவருக்கு மண்டையில் சரக்கு ஒன்றும் இல்லை” என காட்டமாக விமர்சனம் செய்தார்.

ஆதாரம் எங்கே?

”பாஜக தலைவர் அண்ணாமலை தனியார் மின்சார கொள்முதலில் ஊழல் என்று கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இனிமேல் ஆதாரத்துடன் மட்டுமே அரசின் மீது அவர் குற்றச்சாட்டுகள் வைக்க வேண்டும்.

ஆதாரம் இல்லாமல் அண்ணாமலை போன்றவர்கள் குற்றச்சாட்டுகளை வைத்தால், அதற்கு இனிமேல் பதில் கூறப் போவதில்லை. தான் வைத்த குற்றச்சாடு தொடர்பாக 24 மணி நேரத்துக்குள் ஆதாரத்தை வெளியிடாவிட்டால், அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்.

அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவும், களத்தில் நேருக்கும் நேர் சந்திக்கவும் தயார். அவரைப் போல சமூக வலைதளங்களில் விளையாடவும் தயார். இடத்தையும் நேரத்தையும் முடிவு செய்து விட்டுச் சொன்னால், விவாதிக்கவும் தயார்” எனவும் செந்தில் பாலாஜி காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: கீழடி கண்டுபிடிப்புகளை டிஜிட்டல் முறையில் தெரிந்து கொள்ளும் திட்டம்: தொடங்கி வைத்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.