ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? ஜன.12ஆம் தேதி தீர்ப்பு..!

Minister Senthil Balaji Case:அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது ஜனவரி.12ம் தேதிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற தெரிவித்துள்ளது.

minister-senthil-balaji
அமைச்சர் செந்தில் பாலாஜி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 5:03 PM IST

சென்னை: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே 2 முறை தாக்கல் செய்திருந்த மனுக்களைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் செந்தில் பாலாஜியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு கீழமை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என்றும், உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி 3வது முறையாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் “ இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் இருந்த உண்மை தொகைகளைத் திருத்தி பொய்யாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களை மேற்கோள் காட்டி வாதிட்டார். மேலும் குற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த, வங்கி பணப் பரிவர்த்தனைகளையும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை சேர்த்துள்ளதாகவும், செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் இருந்த தகவல்கள் திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானத்தை அமலாக்கத்துறை கணக்கில் கொள்ளவில்லை எனவும், ஆவணத்தில் உள்ள தேதிகளை விசாரணைக்கு ஏற்ற வகையில் அமலாக்கத்துறை மாற்றி உள்ளதாகக் குற்றம் சாட்டினார். எனவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டார்.

இதனையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷன் ஆஜராகி, கடந்த 2016 முதல் 2017ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் திடீரென பல லட்சம் கணக்கில் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பென்- டிரைவில், வேலை வாய்ப்பு தொடர்பாக யார், யாரிடம் இருந்து எவ்வளவும் தொகை பெறப்பட்டது, அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருந்ததாகவும், வங்கி ஆவணங்களைத் திருத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டுகள் ஏற்புடையதல்ல என தெரிவித்தார்.

மனுதாரர் சட்ட விரோதமாகப் பணம் பெற்றார் என்பதற்கான முகாந்திரம் உள்ளதாகவும், அதற்கான அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நிறைவு பெற்றதாகவும்,சாட்சி விசாரணையும் நிறைவு பெற்றதால் மேற்கொண்டு விசாரணை நடத்தத் தேவையில்லை என்றார்.

இலாகா இல்லாத அமைச்சராக, இன்னும் அவர் தொடர்வதால், சமூகத்தில் அதிகாரம் நிறைந்த நபராகத் தொடர்வதாகத் தெரிவித்தார். செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தற்போது வரை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் தலைமறைவாக உள்ளதாகத் தெரிவித்தார் அவர், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி அல்லி, ஜனவரி 12ம் தேதி தீர்ப்பு வழங்குவதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: போக்குவரத்து தொழிலாளர்கள் அவசரப்பட்டு விட்டார்கள்; சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருத்து..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.