ETV Bharat / state

'5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு;ஆனாலும் ஃபெயில் ஆக்க மாட்டோம்' - அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழ்நாட்டின் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொது தேர்வு நடத்தப்பட்டாலும் தற்போதுள்ள நடைமுறைபடி அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

minister senkottaiyan
author img

By

Published : Oct 3, 2019, 9:04 PM IST

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், " தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆலோசனைப்படி பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றத்தின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்த வேண்டும்.

அதனடிப்படையில் தமிழ்நாட்டிலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படவுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பயிலும் மாணவர்கள் பொது தேர்வு எழுதினாலும் அனைவரும் தேர்ச்சியடையும் வகையில் மூன்றாண்டுகளுக்கு தேர்ச்சி முறை அறிவிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது உள்ள நடைமுறையைப் போல் மூன்று ஆண்டுகள் எந்தவித தடையும் இல்லாமல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள்.

அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

பெரும்பாலும் ஒரு கிலோமீட்டருக்குள் ஆரம்பப்பள்ளி உள்ளது. எனவே சிறு குழந்தைகள் நடந்து சென்று தேர்வு எழுத வேண்டிய நிலை இருக்காது. இந்தாண்டு பொதுத்தேர்விற்கு வினாத்தாள் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன " என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’7500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்’ - அமைச்சர் செங்கோட்டையன்

Intro:5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு உண்டு
மாணவர்கள் பெயில் கிடையாது
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Body:சென்னை,
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்படும் எனவும் ஆனால் எந்த மாணவரும் பெயில் செய்யமாட்டார்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே .ஏ. செங்கோட்டையன், தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஆலோசனை பள்ளி கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றத்தின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும். அதனடிப்படையில் தமிழகத்திலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்பட உள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் பயிலும் மாணவர்கள் பொது தேர்வு எழுதினாலும் அனைவரும் தேர்ச்சி அடையும் வகையில் மூன்றாண்டுகளுக்கு தேர்ச்சி முறை அறிவிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் விதிகளின்படி பொதுத்தேர்வு நடத்தப்பட்டாலும் தற்போது உள்ள நடைமுறையை போல் 3 ஆண்டுகள் எந்தவித தங்கு தடையும் இன்றி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்க முடியும்.

பெரும்பாலும் ஒரு கிலோ மீட்டருக்குள் ஆரம்பப் பள்ளி உள்ளது. எனவே சிறு குழந்தைகள் நடந்துசென்று தேர்வு எழுத வேண்டிய நிலை இருக்காது. இந்த தேர்வினால் மாணவர்களின் கற்றல் திறனை அறிய முடியும். மேலும் அவர்களின் கல்வியும் மேம்பாடு அடையும். அப்போதுதான் மாணவர்கள் எதிர்காலத்தில் தேர்வினை எதிர்கொள்ள முடியும்.

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்க ஏன் செல்லவில்லை என கேட்கிறீர்கள். இதுபோன்று தேர்வினை வைத்து மாணவர்களின் திறனை அறிந்தால் தான் அவர்களின் கல்வி கற்கும் திறனை மேம்படுத்த முடியும்.

இந்தாண்டு பொதுத்தேர்விற்கு ஆண்டு இறுதியில் நடைபெறும் முழு ஆண்டு தேர்விற்கான கேள்விகளை கேட்பது குறித்து ஆலோசித்து வருகிறது. மாணவர்களுக்கான வினாத்தாள்கள் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.

Conclusion:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.