சென்னை: தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் துறை அலுவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "துறை சார்பில் பல்வேறு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று காலை வக்பு வாரியம் சார்பில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் நிர்வாகத்தை மூன்று மாதத்திற்குள் சரி செய்து தீர்வு காண வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தலைமையிடமாக வைத்து, வெளிநாடு வாழ் தமிழர்களின் விவரங்களை ஊராட்சி வாரியாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் செல்லும் தொழிலுக்கு இங்கே பயிற்சி கொடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான காப்பீட்டு திட்டம் அறிவித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கபட்டது .
வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் தொழில் தொடங்கும் விதமாக வட்டியில்லாக் கடன், 60 வயதாகிய பின் தமிழ்நாடு திரும்புபவர்களுக்கு உதவி தொகையாக குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க; ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிப்பு!