இன்று சட்டப்பேரவையில், 2020-2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் கொறடா விஜயதாரணி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக செங்கோட்டையன் இதனை கூறியுள்ளார்.
அண்மையில் வெளியாகியுள்ள மத்திய அரசின் புள்ளி விவரம், தமிழ்நாட்டு பள்ளிகளில் இடைநிற்றல் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக கூறுகிறது. இதனை சரி செய்ய அரசும் பள்ளிக் கல்வித் துறையும் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள இருக்கின்றன என்பதை விளக்க வேண்டும் என்று விஜயதாரணி கேல்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், 2018-2019ஆம் ஆண்டில் 14 சதவிகிதம் பேர் பள்ளியில் இருந்து இடைநிற்றல் செய்துள்ளனர் என மத்திய அரசு புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. இது எந்த வகையிலான கணக்கில் வெளியிடப்பட்டது என்பதை அறிய மத்திய அரசிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளோம். தமிழ்நாடு அரசு அனுப்பிய அந்த கடிதத்திற்கு, இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட புள்ளி விவரம்தான் சரியானது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ‘பேரவையில் இருந்து வெளிநடப்பு ஏன்?’ - விஜயதாரணி விளக்கம்