சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோயில் மற்றும் பெரிய பாளையத்து அம்மன் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சென்னை ராயப்பேட்டை சித்தி புத்தி விநாகயகர் கோயில், பெரியபாளையத்து அம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டோம். சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் நகர்ப்புற பகுதிகளில் கோயில்களை புனரமைக்க 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சித்தி புத்தி வினாயகர் கோயில், பெரியபாளையத்து அம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட பின் திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்குப் பயத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதால் ஆதீனங்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டது என விளக்கமளித்தார்.
எதிர்காலங்களில் பட்டின பிரவேசம் போன்ற நிகழ்வுகளுக்குச் சுழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என கூறினார். ஆத்திகர், நாத்திகர் என அனைவருக்குமான அரசாக உள்ளதாகவும்அவர் கூறினார். ஆர்.ஏ. புரம் பகுதியில் தனி நபர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும், யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில் ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் எழிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: திமுக அரசு ஆன்மிக மணம் வீசுகின்ற அரசாக விளங்குகிறது - அமைச்சர் சேகர் பாபு!