ETV Bharat / state

காய்கறிகள் விலை ஏற்றம்: வியாபாரிகளுக்கு உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை - basic food items rate hiked

சென்னை: காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள், நிறுவனங்கள் மீது அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

minister-sakkarapani-warns-about-vegetables-hike

author img

By

Published : May 23, 2021, 1:01 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா பெருந்தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நாளை (மே.24) முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. மக்களின் உயிர்காக்கும் பொருட்டும், நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை அனைத்துத் தரப்பினரையும் ஆலோசித்து எடுக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க இயலாத இந்த நடவடிக்கையை மக்கள் ஏற்று ஒத்துழைப்பு தரும் இந்த வேளையில், சில வணிக நிறுவனங்கள், வியாபாரிகள் இந்த இக்கட்டான நிலையை பயன்படுத்தி காய்கறிகளை, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

இது மக்களை சுரண்டும் ஒரு செயல். இவ்வாறு உயர்த்தப்பட்ட விலையினை உடனடியாக வழக்கமான விலைக்கு குறைக்க வணிகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள், நிறுவனங்கள் மீது அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் சூழ்நிலை நிகழாத வகையில் வணிகர்களும், தனியார் நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வங்கியில் ரூ.10 லட்சம் கடன் பெற்று நிவாரணம் வழங்கும் வார்டு உறுப்பினர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.