சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியின் 23ஆம் ஆண்டு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையை நாடு கலந்து கொண்டார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு, தமிழர்களின் பாராம்பரிய கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆகியவற்றுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் க. பாண்டியராஜன், “சிற்பக்கலைக்கு ஒரு புதிய பல்கலைக்கழகம் (கல்வெட்டியல்) தொடங்கப்படவுள்ளது. அதனை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
பிரதமர் வருகைக்கு பிறகு மாமல்லபுரம் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக மாறியுள்ளது. ஆகவே இங்கு கலைக்கூடங்கள் மற்றும் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு மத்திய அரசு நிதி வழங்கும் என நம்புகிறோம்” என்றார்.
முன்னதாக திருவள்ளுவர் சிலையை வெங்கையா நாயுடு திறந்துவைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர் க.பாண்டியராஜன் உடனிருந்தார்.
இதையும் படிங்க...மருத்துவர் நியமனத்தில் முறைகேடு: பேரவை துணைத் தலைவரே புகாரளித்ததால் பரபரப்பு!