சென்னை எழிலகத்திலுள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்புக்கு முதலமைச்சர் ஒதுக்கியுள்ள நிதி மக்களுக்காக அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, அனைத்து பணிகளும் நடைபெற்றுவருகின்றது. சமூகப் பரவலைத் தடுக்கவே முதலமைச்சர் பழனிசாமி எடுத்துள்ள நடவடிக்கை தான் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளின் நேரம் குறைப்பாகும்.
கரோனா வைரஸ் தடுப்பிற்கு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு 510 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் உடலால் தனித்திருந்தாலும் உள்ளத்தால் ஒன்றாக உள்ளோம் என்று ஒற்றுமையை உலகிற்குக் காட்டவே பிரதமர் மோடி இன்று இரவு அகல்விளக்கு ஏற்றுமாறு கூறியுள்ளார். அகல்விளக்கு ஏற்றுவது தமிழர் பாரம்பரியம் தான் அதில் எந்த தவறும் இல்லை” என்றார்.
இதையும் படிங்க...இன்று ஏன் ஒளியேற்ற வேண்டும்? விளக்குகிறார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை!