சட்டப்பேரவையில் வனத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன், "வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில்தான் வன உயிர் மோதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை 4 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தப்பட்டது" என பேசினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராமச்சந்திரன், “வன உயிர் மோதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இடைக்கால பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவும் இல்லை, வழங்கவும் இல்லை.
டான்டீ (TANTEA), ரப்பர் தோட்ட கழகம் உள்ளிட்டவை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் லாபகரமானதாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "ஏற்கனவே இருந்த நஷ்டத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. இந்திய அளவிலான வணிகத்தை பொறுத்து விலை உயர்வு, குறைவு அமைகிறது.
இதற்கு, "பெரும்பாலான டீ தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்கவில்லை. ஆனால் நிர்வாகம் சரியில்லை அதை நாங்கள் சரி செய்வோம்" என அமைச்சர் விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: அயோத்திதாசருக்கு மணிமண்டபம்