தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள், தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நச்சுத்தன்மை உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ராஜேந்திரபாலாஜி, இந்த விவகாரம் குறித்து முன்பிருந்தே கூறி வருகிறேன். இதற்கு மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
உள்ளாட்சி வரை பேட்டிக்கு நோ சொல்லும் அமைச்சர்:
முதலமைச்சர் பழனிசாமி குறித்து டிடிவி. தினகரன் வைத்த விமர்சனம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றபோது, "உள்ளாட்சித் தேர்தல் வரை என்னிடம் பேட்டி வேண்டாம் விடுங்க" என்று கூறிவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து காரில் புறபட்டுச் சென்றார்.
கடந்த சில பேட்டிகளில் இவர் சர்ச்சையான பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ''திமுகவினரின் சட்டையை கிழிங்க, வீட்டு கதவை உடைங்க" - அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு!