கிராம பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் உடனடியாக மருத்துவ வசதி பெறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரம் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதனடிப்படையில் ராஜபாளையம் அருகே தேவதானம், புத்தூர் பகுதிகளில் அம்மா மினி கிளினிக்களை பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடக்கி வைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி , “பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்குவதை, சிலர் ஏன் வழங்க வேண்டும் என மோசமாக பேசி வருகின்றனர். அந்தக் காலத்தில் மன்னர்கள் மக்களின் குறைகளை அறிந்து செயல்பட்டனர். அதேபோல்தான் மக்களுக்கு என்ன தேவை என்பதை பார்த்து மன்னராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்" என புகழாரம் சூட்டினார்.
மேலும், சாதாரண ஏழை எளிய மக்களுக்கும் விவசாயத் குடும்பங்களுக்கும் எளிதாக மருத்துவம் கிடைக்க வேண்டும் என முதலமைச்சர் அம்மா மினி கிளினிக் திட்டத்தை கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க...சென்னைக்கு இனி குடிநீர் தட்டுப்பாடு வராது: அமைச்சர் வேலுமணி!