ETV Bharat / state

அதிக கட்டண வசூலில் ஈடுபட்ட 5 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை - அமைச்சர் ராஜகண்ணப்பன் - அதிக கட்டண வசூலால் 5 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்த 5 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன்
அமைச்சர் ராஜகண்ணப்பன்
author img

By

Published : Nov 2, 2021, 10:58 PM IST

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தீபாவளி சிறப்பு பேருந்துகளை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,371 பேருந்துகளில் 37 பேருந்துகள் பெரும் பழுது உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 20,334 பேருந்துகள் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகின்றன.

சிறப்பு பேருந்துகள்

நேற்றைய தினம் சென்னையில் இருந்து 2,100 தினசரிப் பேருந்துகளுடன் 338 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது. அதில் 89,932 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர். இன்றைய தினம் இரவு 7 மணி நிலவரப்படி சென்னையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளில், 1,88,107 பயணிகள் பயணம் செய்கின்றனர்.

நாளைய தினம் சென்னையிலிருந்து 2,100 தினசரி பேருந்துகளும் 1,540 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இதில் பயணம் செய்திட 1,05,051 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 044-24749002, 18004256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இதுவரை ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்ததாக 5 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து மாநகர் முழுவதும் 270 இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்குப் பிடிவாரண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.