ETV Bharat / state

ஆளுநர் மாளிகைக்கு வழங்கிய ரூ.5 கோடி எங்கே?.. பேரவையில் பகீர் கிளப்பிய பிடிஆர் - அட்சய பாத்திரம் திட்டம்

ஆளுநர் மாளிகைக்கு கொடுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் செலவுகள் குறித்து மாற்றங்கள் வந்ததாக ஆய்வு செய்யப்பட்டது என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இந்நிலையில், அதிமுக ஆட்சியில் அதிமுக ஆட்சியில் காலை உணவு திட்டத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கியது ஏன்? என பிடிஆர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 30, 2023, 3:53 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் இன்று ( மார்ச் 30 ) நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தொண்டாமுத்தூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை அட்சய பாத்திரம் என்ற திட்டமாக அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தியதாக பேசினார்.

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “ஆளுநர் மாளிகைக்கு கொடுக்கப்பட்ட ஒதுக்கீடு செலவுகள் குறித்து மாற்றங்கள் வந்ததாக ஆய்வு செய்யப்பட்டது. கடந்த 2018-19 வரை ரூபாய் 50 லட்சம் பணம் தணிப்பட்ட நிதி (discretionary fund) ஆக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் 2019 ஆம் ஆண்டுக்கு பின் திடீரென 50 லட்சத்தில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி தனிப்பட்ட அதிகாரம் (Discretionary power) என்ற பிரிவில் 50 லட்சத்தை 5 கோடி ரூபாயாக ஆக்கியுள்ளனர். அந்த கணக்கை ஆய்வு செய்ததில், 5 கோடியில் 4 கோடி ரூபாயை அட்சய பாத்திரம் திட்டத்துக்கு தனியார் அமைப்புக்கு கொடுத்துள்ளனர்.

பூண்டு, வெங்காயம் சேர்க்காத அது ஒரு அமைப்பு. அவர்கள் வழியில் செய்யக்கூடிய உணவை, அது சத்து உணவு கூட இல்லை. அரசு இடத்தை வைத்து, அரசு பணத்தை வைத்து, நம் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக பணத்தை எடுத்திருக்கின்றனர். மீதமுள்ள ஒரு கோடி ரூபாய் ஆளுநர் மாளிகை கணக்குக்கு கண்ணுக்கு தெரியாத கணக்கில் மாற்றப்பட்டுள்ளது.

மீண்டும் அடுத்தாண்டு 5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு, அதில் ஒரு கோடி ரூபாய் அட்சய பாத்திரத்திற்கு கொடுக்கப்பட்டது. 4 கோடி ரூபாய் வேறொரு கணக்கிற்கு மாற்றப்பட்டது. பிறகு அத்திட்டமே நின்று போனது. ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் அரசு கணக்கில் இருந்து எடுத்து வேறு கணக்கிற்கு செலுத்தியுள்ளனர்.

ஆளுநர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தலைப்பில் பணத்தை கொடுத்துள்ளனர். அதில் கணக்கை பார்த்தபோது அது அரசியலமைப்பு உட்பட்டதா அல்லது இல்லையா என்பது தெரியவில்லை. ஏதோ கட்சி நடத்துவதற்காக செலவு பண்ணப்பட்டதா என்று அச்சம் வருகிறது” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை அந்த நிதி ஆண்டின் இறுதியில் மற்ற கணக்கிற்கு மாற்றுவது சரியல்ல என சிஏஜி பலமுறை எச்சரிக்கை விடுத்தும் இதுபோல நடந்துள்ளது. மேலும், 5 கோடி ரூபாயை எந்த காரணம் இல்லாமல் யாருக்கும் சொல்லவே தேவையில்லாமல், மறைமுகமாக கணக்குக்கு கொண்டு செல்வதற்கு இது ஜனநாயக மரபில் கிடையாது” என தெரிவித்தார்.

இது நல்ல திட்டமே இல்லை, 500க்கும் 1000 ரூபாய்க்கும் மானிய கோரிக்கையில் சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற்று வருகிறோம் என்று கூறினார். ஆனால் 5 கோடி ரூபாயை யாருக்கும் சொல்லத் தேவையில்லாத கணக்கில் மாற்றி செலவழிக்கும் நிலை என்பது அரசியலமைப்புக்கு உட்பட்டது தானா? என ஆவேசமாக பேசினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட தொகை என்பது பள்ளி மாணவர்களுக்கு உணவளிப்பதற்காக வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு உணவளிப்பது தவறா? என்று கேள்வி எழுப்பினார். அப்போது விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன், மொத்தத்தில் பார்த்தால் இதில் ஆளுநர் (அப்போதைய ஆளுநர்) தான் பதில் சொல்ல வேண்டும் என்றார். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.