ETV Bharat / state

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை - பி.டி.ஆர். ஆலோசனை

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொண்டார்.

பி.டி.ஆர். ஆலோசனை
பி.டி.ஆர். ஆலோசனை
author img

By

Published : Feb 23, 2022, 5:10 PM IST

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் ஆலோசனையில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

2022-23ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால், அதன் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவெடுக்கும் வகையில் பல்வேறு கட்டங்களாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையின்போது வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் அமைக்கப்பட்டது.

அதேபோல மார்ச் மாதம் வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வேளாண் துறை சார்ந்த பிரதிநிதிகளுடனும், விவசாய சங்க நிர்வாகிகள், பால்வளத்துறை, கால்நடை துறை சார்ந்த தொழிலதிபர்கள், சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொண்டு கருத்துக்களை கேட்டறிந்தார்.

அவர்கள் அளிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு இருந்தால்; பாஜக விட பத்து மடங்கு வெற்றி பெற்று இருக்கும் - கே.எஸ். அழகிரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.